இந்திய ரயில்வே 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இந்த புதிய சேவை கிழக்கு இந்தியாவை தெற்கு, மேற்கு மற்றும் வட இந்திய நகரங்களுடன் இணைக்கும்.
இந்திய ரயில்வே பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பொதுப் பயணிகள் வசதிக்காக இந்திய ரயில்வே விரைவில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை 9 விதமான பாதைகளில் இயக்கத் தயாராகி வருகிறது. இந்த தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். நீண்ட தூரம் பயணம் செய்யும் நான்-ஏசி ஸ்லீப்பர் பயணிகளை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரயில்கள், குறைந்த கட்டணத்தில் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24
திருச்சிராப்பள்ளி புதிய ரயில் பாதை
புதிய 9 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ள முக்கிய பாதைகள்: குவாஹாட்டி (காமாக்யா) – ரோத்தக், டிப்ரூகர் – லக்னோ (கோம்தி நகர்), நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி – திருச்சிராப்பள்ளி, அலிபுர்துவர் பெங்களூர் – அலிபுர்துவர். (பன்வெல்), கொல்கத்தா (சாந்த்ராகாச்சி) – தாம்பரம், கொல்கத்தா (ஹவுரா) – ஆனந்த் விஹார் டெர்மினல், கொல்கத்தா (சீல்தா) – பனாரஸ் ஆகியவை இதில் அடங்கும். இதன் மூலம் மேற்கு வங்காளம், அசாம், பீகார் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளிலிருந்து தெற்கு, மேற்கு மற்றும் வட இந்திய நகரங்களுக்கு இணைப்பு மேலும் வலுப்பெறும்.
34
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்
குறிப்பாக இந்த ரயில்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வெளிமாநில வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள்) மற்றும் நீண்ட தூர பயணிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலை, கல்வி, குடும்பத் தேவைகள் போன்ற காரணங்களுக்காக ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்வோருக்கு நம்பகமான, மலிவு மற்றும் சீரான பயண வசதி கிடைக்கும். பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகரிக்கும் நேரத்தில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘அம்ரித் கால’ சிறப்பு முயற்சியாக அறிமுகமான Amrit Bharat Express ரயில்கள், நீண்ட தூர Non-AC Sleeper பயணத்திற்காக உருவாக்கப்பட்டவை. இந்த ரயில்களின் கட்டணம் 1000 கிமீ பயணத்திற்கு சுமார் ரூ.500 என கூறப்படுகிறது. 2023 டிசம்பர் முதல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 30 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இப்போது சேரும் 9 புதிய ரயில்களுடன் மொத்த எண்ணிக்கை 39 ஆக உயர உள்ளது.