இந்திய இளைஞர்களை ‘வரலாற்றைப் பழிவாங்குங்கள்’ என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சித்துள்ளார். வரலாற்றில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பை (NSA) பலவீனமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஜித் தோவல், ‘‘படையெடுப்புகள் மற்றும் அடிமைத்தனத்தின் வேதனையான வரலாற்றை பழிவாங்க இந்தியா அதன் எல்லைகளில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும், எல்லா வகையிலும் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஒரு முற்போக்கான சமூகமாக இருந்தோம். நாம் மற்ற நாகரிகங்களையோ அல்லது அவற்றின் கோயில்களையோ தாக்கவில்லை. ஆனால், பாதுகாப்பு குறித்து நமக்கு சுய விழிப்புணர்வு இல்லை. எனவே வரலாறு நமக்கு ஒரு பாடம் கற்பித்தது. அந்தப் பாடத்தை நாம் கற்றுக்கொண்டோமா?" என்று தோவல் கேள்வி எழுப்பி இருந்தார்.