அப்படி இருந்த போதிலும் பள்ளி மாணவன் திருந்தவில்லை. ஆசிரியர்களுக்கு ஓயாமல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த ஆசிரியை வேலையை விட்டு சென்றுள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட அந்த பள்ளி மாணவன் அங்கும் சென்று ஆசிரியைக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருவில் நடந்து சென்ற போது ஆசிரியரை பின்தொடர்ந்த மாணவன் வலுக்கட்டாயமாக அவரை தனியாக இழுத்து சென்று அவரது உதடுகளை கடித்தது மட்டுமல்லாமல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கழுத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.