இந்து சமூகம் ஒருபோதும் அடக்கமுறையை ஆதரித்ததில்லை என்று குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போயிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இனக்கலவத்திற்கு பின்னர் முதல் முறையாக மணிப்பூருக்கு சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “உலகின் ஒவ்வொரு நாடும் அனைத்து வகையான சூழல்களையும் சந்தித்திருக்கிறது. கிரீஸ், எகிப்து, ரோம் உள்ளிட்ட பேரரசுகளை இந்தியா கடந்துவிட்டது. அனைத்து நாகரீகங்களும் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. ஆனால் நமது நகரீகத்தில் ஏதோ ஒன்று உள்ளது. அதனால் தான் நாம் தற்போதும் இங்கு இருக்கிறோம். இந்து சமூகம் ஒருபோதும் அழியாது.
23
இந்து இல்லையென்றால் உலகமே இல்லாமல் போய்விடும்
பாரதம் என்பது அழியாத ஒரு நாகரீகத்தின் பெயர். இந்து சமூகம் ஒருபோதும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்து தர்மம் அழிந்துவிட்டால் உலக நகரங்களும் அழிந்துவிடும். இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போய்விடும். இந்து சமூகம் தான் உலகத்தின் உலகளாவிய பாதுகாவலர் மற்றும் உலகை நிலை நிறுத்துவதற்கு இந்து சமூகம் மையமானது என்று தெரிவித்துள்ளார்.
33
தன்னிரைவு பெறுவது அவசியம்
நாடு பலமானதாக மாற அதன் பொருளாதாரம் தன்னிரைவு பெற்றிருக்க வேண்டியது அவசியம். நமது பொருளாதாரத்தை தற்சார்பு பொருளாதாரமாக மாற்றுவது கடினமானதல்ல. நக்சல் போன்ற பல வேரூன்றிய பிரச்சினைகளை நமது சமூகம் எளிதாக சமாளித்து வந்துள்ளது. நக்சல்களின் கொடுமைகளை இனியும் பொறுத்துக்காள்ள முடிவெடுத்ததால் இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான நமது சுதந்திரப் போராட்டமும் அப்படிப்பட்டது தான்” என்று தெரிவித்துள்ளார்.