ஒவ்வொரு குடும்பமும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் - இந்தியாவின் எதிர்காலத்துக்காக பேசும் மோகன் பகவத்

Published : Aug 29, 2025, 09:19 AM IST

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஒவ்வொரு இந்தியரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

PREV
13
RSS நூற்றாண்டு விழா

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முடிவெடுப்பதில் நாங்கள் நேரடியாகப் பங்கு வகிக்கவில்லை. பாஜக.வில் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் எங்கள் தலையீடு இருந்தால் இவ்வளவு தாமதம் ஏற்பட்டிருக்காது. பாஜகவுக்கும், சங்கத்திற்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடுகளோ, சண்டைகளோ இல்லை. நாட்டின் இலக்குகளை அடைய முயற்சிக்கும்போது "கருத்து வேறுபாடுகள்" இருக்கலாம், ஆனால் "மனவருத்தம்" இல்லை.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தனது புதிய தேசியத் தலைவரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2020 முதல் இந்தப் பதவியில் இருக்கும் ஜே.பி. நட்டாவுக்கு அடுத்தது யார் என்பது குறித்த அறிவிப்பு தாமதமாகி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பாஜக மற்றும் RSS தலைவர்களுக்கு இடையேயான தொடர்ச்சியான உள் ஆலோசனைகள் ஒரு முக்கிய காரணம். தகுதியான நபர்கள் குறித்து 100க்கும் மேற்பட்ட மூத்த நபர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் எதிர்பாராத விதமாக துணை ஜனாதிபதி தேர்தல் தேவைப்பட்டது, இது கட்சியின் கவனத்தை ஈர்த்தது. செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தனது வேட்பாளராக பாஜக ஆதரிக்கிறது மற்றும் அவரது வெற்றியை உறுதி செய்ய பாடுபடுகிறது.

23
பாஜக தலைவரை தேர்வு செய்வதில் தாமதம்

குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மாநிலத் தலைவர்களை நியமிப்பது நிலுவையில் உள்ளது. பாஜகவின் அரசியலமைப்பின்படி, 36 மாநில மற்றும் யூனியன் பிரதேச அலகுகளில் குறைந்தது 19 இல் தலைவர்கள் நியமிக்கப்பட்ட பின்னரே ஒரு தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். கடந்த மாத நிலவரப்படி, 28 மாநிலங்களில் அந்தத் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது, இதனால் கட்சி தனது தேசியத் தலைமையை இறுதி செய்வதற்கு நெருக்கமாக உள்ளது.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த நட்டாவுக்கு, 2024 பொதுத் தேர்தல் வரை கட்சியை வழிநடத்த முன்னதாக நீட்டிப்பு வழங்கப்பட்டது. உள் மறுசீரமைப்பு செயல்முறையை முடிக்க இரண்டாவது நீட்டிப்பு பின்னர் வழங்கப்பட்டது இந்த நீட்டிப்பு காலமும் நிறைவு பெறுவதால் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் கட்டாயம் எழுந்துள்ளது.

33
3 குழந்தைகள், 3 குழந்தைகள்

ஒவ்வொரு இந்தியரும் மொழிகளைத் தெரிந்திருக்க வேண்டும். இதில் அவரவர் தாய் மொழி அல்லது மாநில மொழி, ஒட்டுமொத்த இணைப்பு மொழி ஆகியவை இடம் பெறவேண்டும். இணைப்பு மொழி என்பது வெளிநாட்டு மொழியாக இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட இணைப்பு மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும். அதனை அனைவரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும்.

3 குழந்தைகள்

இந்திய மக்கள் தொகையின் கொளைகக்கு ஏற்றவாறு ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் மக்கள் தொகை குறையாமலும், அதே நேரத்தில் கட்டுக்குள்ளும் வைத்திருக்க முடியும்.

75 வயதில் ஓய்வு?

75 வயதை எட்டும் போது நானோ, வேறு ஒரு நபரோ (75 வயதை நெருங்கும் பிரதமர் மோடி) பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories