கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?

Published : Dec 21, 2024, 05:15 PM ISTUpdated : Dec 21, 2024, 05:41 PM IST

Nelamangala Accident: பெங்களூருவில் நெடுஞ்சாலையில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

PREV
14
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி! நடந்தது என்ன?
Road Accident

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா என்ற இடத்தில் கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது சாலையின் எதிரே வந்த கண்டெய்னர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளி வாகனம் மற்றும் கார் மீது மோதியது. 

24
Road Accident News

இதில் நிலைதடுமாறிய கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மோதிய கார் மீதே கவிழ்ந்தது. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 2 குழந்தைகளும் அடங்கும்.

இதையும் படிங்க: சொகுசு காரில் கட்டு கட்டாக ரூ.10 கோடி! 52 கிலோ தங்கம்! அதிர்ச்சியில் காவல்துறை! இறுதியில் நடந்தது என்ன?

34
Bengaluru Road Accident

இந்த விபத்து தொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிரேன் மூலம் லாரி மற்றும் உருக்குலைந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்! ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம்! எப்படி தெரியுமா?

44
Police investigation

விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories