வீட்டுக் கடனுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் மத்திய அரசு!

Published : Dec 20, 2024, 04:48 PM ISTUpdated : Dec 20, 2024, 04:49 PM IST

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

PREV
19
வீட்டுக் கடனுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் மத்திய அரசு!
Pradhan Mantri Awas Yojana 2.0

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் உதவியுடன் சில நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நனவாகியுள்ளது.

29
Affordable Housing

மோடி அரசு தனது முதல் பதவிக் காலத்திலேயே இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இரண்டாம் கட்டமாக தற்போது அனுமதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

39
PM Modi

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

49
Pradhan Mantri Awas Yojana

மீதமுள்ள திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி வழங்கப்படும்.

59
Government Schemes

ஏற்கனவே சொந்த வீடு உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. பயனாளிகள் மூன்று பிரிவுகளாகவும், திட்டம் நான்கு பிரிவுகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

69
Home Loan benefits

பயனாளிகள் பிரிவுகள்:

1) ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவர்கள் (EWS)

2) ஆண்டு வருமானம் ரூ.3-6 லட்சம் உள்ளவர்கள் (LIG)

3) ஆண்டு வருமானம் ரூ.6-9 லட்சம் உள்ளவர்கள் (MIG)

79
Loan Process

திட்டப் பிரிவுகள்:

1) PMAY2.0 - பயனாளி அடிப்படையிலான கட்டுமானம் (BLC)

2) கூட்டுறவு மலிவு விலை வீடுகள் (AHP)

3) மலிவு வாடகை வீடுகள் (ARH)

4) வட்டி மானியத் திட்டம் (ISS)

89
Middle Class

BLC மாதிரியில் EWS பிரிவினர் தங்கள் நிலத்தில் வீடு கட்ட உதவி பெறலாம். AHP மாதிரியில் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் மலிவு விலை வீடுகள் கட்டப்படும். EWS பிரிவினருக்கு நிதி உதவி வழங்கப்படும்.

99
PMAY-U 2.0 Eligibility

வட்டி மானியத் திட்டத்தின் (ISS) கீழ் ரூ.35 லட்சம் மதிப்புள்ள வீடுகளுக்கு ரூ.25 லட்சம் வரை வீட்டுக் கடன் வழங்கப்படும். மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

கிழிந்த நோட்டு உங்ககிட்ட இருக்கா? ஈசியா மாத்தலாம் இப்போ!

click me!

Recommended Stories