பல சிம் கார்டுகள் சிக்கலா?
உங்கள் பெயரில் பல சிம் கார்டுகள் உள்ளதா? சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். சிறைத்தண்டனையும் கிடைக்கலாம்.
புதிய சிம் கார்டு விதிகள்
உங்கள் பெயரில் பல சிம் கார்டுகள் உள்ளதா? சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். சிறைத்தண்டனையும் கிடைக்கலாம்.
சிம் கார்டு வரம்பு விதிகள்
ஒரு வாடிக்கையாளராக நீங்கள் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்பதற்கான புதிய விதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதியை மீறினால் 2 லட்ச ரூபாய் அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
9 சிம் கார்டுகள் வரை
2023 ஆம் ஆண்டின் புதிய தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் ஒரு நபர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் வைத்திருக்கலாம்.
சில பகுதிகளில் 6 சிம் கார்டுகள்
ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு நபர் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகளை வாங்கலாம். 2023 ஆம் ஆண்டின் புதிய தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் இந்த விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அபராதம் ரூ.50,000 வரை
நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி சிம் கார்டுகளைப் பயன்படுத்தினால், முதல் முறை குற்றத்திற்கு 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
பெயரில் சிம் கார்டுகள் இருந்தால்?
நீங்கள் 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்காவிட்டாலும், வேறு யாராவது உங்கள் பெயரில் சிம் கார்டுகளை வாங்கியிருந்தாலும், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
சஞ்சார்சாதி போர்டல்
இதுதொடர்பாக மேலும் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் Sanchar saathi portal சென்று பார்க்கவும். மத்திய அரசின் இந்த தளத்தில் ஏராளமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
9+ சிம் கார்டுகள் - சிக்கல்
9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் இருந்தால், சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படலாம்.