One Nation, One Election bill
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலும், மாநில சட்டமன்றங்களின் தேர்தலும் தனித்தனியாக நடந்து வருகிறது. இதனால் அதிக செலவு ஏற்படுவதால் நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது.
ஆனால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பரிபோகி மன்னராட்சிக்கு வழிவக்கும் என்று காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்தது மத்திய அரசு.
General Goverment
பின்பு இந்த குழு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிடம் கருத்துகள் கேட்டு சமர்ப்பித்த அறிக்கையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2029ம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என கூறியது. இதனைத் தொடர்ந்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்களை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்கிறார். இந்த மசோதாவை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் எதிர்க்கும் கட்சிகள் குறித்து இப்போது பார்ப்போம்.
பத்மஸ்ரீ விருது பெற்ற துளசி கவுடா காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!
One Nation One Election Opposing parties
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை ஆதரிக்கும் கட்சிகளின் பட்டியல்:
பா.ஜ.க, அதிமுக, பாமக, தமாகா, தேசிய மக்கள் கட்சி, அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், அப்னா தால், ASOM கண பரிஷத், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி கட்சி, மிசோ தேசிய முன்னணி, தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, சிரோமணி அகாலி தளம், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், இந்திய குடியரசுக் கட்சி, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம், ஐக்கிய கிசான் விகாஸ் கட்சி, பாரதிய சமாஜ் கட்சி, கோர்கா தேசிய லிபரல் முன்னணி, இந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி, ஜன் சுரஜய் சக்தி, ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, நிஷாத் பார்ட்டி, புதிய நிதி கட்சி, ராஷ்டிரவாதி காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்), ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி, சிவசேனா, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா.
One Nation One Election supporting parties
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை எதிர்க்கும் கட்சிகளின் பட்டியல்:
காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIமீம்), நாகா மக்கள் முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா.
ஒரு விஐபி மரத்தை பராமரிக்க ஆண்டுக்கு ரூ 12 லட்சம் செலவு செய்யும் அரசு!