எல்.கே. அத்வானி மீண்டும் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

First Published | Dec 14, 2024, 8:12 PM IST

LK Advani Hospitalized: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்கே அத்வானிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளு. இதனால், அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LK Advani Hospitalized

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 96 வயதாகும் அத்வானி, தலைநகர் டெல்லியில் வசித்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார்.

BJP Veteran LK Advani

இந்நிலையில், இன்று மீண்டும் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அத்வானி மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் முதல்கட்ட தகவல்கள் மூலம் தெரிகிறது. ஏற்கெனவே அவருக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சினை மற்றும் சுவாசக் கோளாறுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

இந்திய சுதந்திரத்திற்கு முன் நவம்பர் 8, 1927-ல் பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த அத்வானி, அவருடைய 14 வயதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) சேர்ந்தார். 1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அவர் தனது குடும்பத்துடன் மொத்தமாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார்.

ayodhya babri masjid highcourt lk advani murli manohar joshi uma bharti

1951-ல் உருவான பாரதிய ஜனசங்கத்தில் அத்வானி சேர்ந்தார். அவர் 1970-ல் ராஜ்யசபாவில் கால்பதித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாஜ கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975ல் இந்திராகாந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தின் போது அடல் பிஹாரி வாஜ்பாயுடன் சேர்த்து அத்வானியும் கைது செய்யப்பட்டார்.

LK ADVANI

1977ம் ஆண்டு மொராஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தபோது, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக அத்வானி நியமிக்கப்பட்டார். 1980ம் ஆண்டு உதயமான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) நிறுவன உறுப்பினர்களில் ஒருவரானர்.

Latest Videos

click me!