
இன்றைய உலகில் கல்வி தான் மிகப்பெரும் செல்வம். கல்வி என்னும் அழியாத செல்வத்தை பெற்று விட்டால் பணம், பதவி, கெளரவம் என எந்த ஒரு உச்சத்துக்கும் செல்ல முடியும். ஆகையால் தான் வறுமை காரணமாக படிக்க முடியாத மாணவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச கல்வி வழங்கி வருகிறது.
அந்த வகையில் ஏழை, எளிய மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் சூப்பர் திட்டத்த்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதவாது SC (பட்டியலிடப்பட்ட சாதி), ST (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்), OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) (கிரீமி லேயர் அல்லாதோர்), மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கான பயிற்சியை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளது.
Coaching Schemes For Sc/st/obc (non-creamy Layer) & Minority Students For Universities என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு முதுகலை படிப்பு தொடர்பான பயிற்சிகள், போட்டித் தேர்வு தொடர்பாக பயிற்சிகள், நெட் தேர்வு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரை சந்தித்து இந்த திட்டத்துக்குரிய விண்ணப்பங்களை பெற்று அதை சரியான தகவல்களுடன் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தின்போது ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பியை கொடுக்க வேண்டும். பின்பு அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
கேன்சல் டிக்கெட் மூலம் மட்டும் ரயில்வே இத்தனை கோடி வருவாய் ஈட்டுகிறதா?
இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அதாவது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான புத்தகங்கள், பத்திரிகைகள், கற்பித்தல்/கற்றல் உதவி பொருள், கம்ப்யூட்டர்கள், போட்டோகாப்பியர், ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டர் ஆகியவை வாங்குவதற்காக இந்த திட்டத்துக்காக அதிகப்பட்சம் ரூ.7 லட்சம் வரை சம்பந்தபட்ட கல்லுரிகள்,பல்கலைக்கழங்களுக்கு மத்திய அரசு வழங்கும்.
மாணவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும் மத்திய அரசே வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி தொடர்பான ஆலோனைகள், படித்து முடித்து விட்டு என்னென்ன வேலையில் சேரலாம்?, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித்தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது, எப்படி வெற்றி பெறுவது, ஆங்கிலம் குறித்த சந்தேகங்கள், அடுத்து என்ன படிக்கலாம்? என்பது தொடர்பான ஆலோசனைகளும், பயிற்சியும் இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
அரசு போட்டித் தேர்வுகள், உயர் கல்வி படிப்புகளுக்கான பயிற்சிகள், ஆலோசனைகளுக்கு தனியார் கோச்சிங் சென்டர்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் நிலையில், மாணவர்கள் மத்திய அரசின் இந்த இலவச பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
பெங்களூரின் மலிவு விலை விஸ்கி எது தெரியுமா? ரொம்ப கம்மியா இருக்கே!