தபேலா இசை ஜாம்பவான் உஸ்தாத் ஜாகிர் உசேன் காலமானார்

Published : Dec 15, 2024, 09:59 PM ISTUpdated : Dec 15, 2024, 10:03 PM IST

புகழ்பெற்ற தபேலா இசை மேதை உஸ்தாத் ஜாகிர் உசேன் தனது 73வது வயதில் காலமானார். சான்பிரான்சிஸ்கோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது உயிர் பிரிந்தது.

PREV
14
தபேலா இசை ஜாம்பவான் உஸ்தாத் ஜாகிர் உசேன் காலமானார்
Ustad Zakir Hussain

புகழ்பெற்ற தபேலா இசை மேதை உஸ்தாத் ஜாகிர் உசேன் தனது 73வது வயதில் காலமானார். சான்பிரான்சிஸ்கோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது உயிர் பிரிந்தது.

24
Ustad Zakir Hussain Died

மும்பையில் 9 மார்ச் 1951 இல் பிறந்தார். இவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா குரேஷியும் தபேலா வாசிப்பவர். ஜாகிர் உசேன் தனது ஆரம்பக் கல்வியை மாஹிமில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் முடித்தார் மற்றும் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். சிறுவயதிலிருந்தே தாள இசை மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

34
Ustad Zakir Hussain Passed Away

உஸ்தாத் ஜாகிர் ஹுசைனின் இசைப் பயணம் 11 வயதிலேயே ஆரம்பமானது. அவர் தனது முதல் இசை நிகழ்ச்சியை அமெரிக்காவில் நிகழ்த்தினார். அவரது முதல் ஆல்பமான 'லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்ட்' 1973 இல் வெளியிடப்பட்டது.

தனித்துவமான தபேலா இசைக்கு பெயர் பெற்ற அவர், சமையலறை பாத்திரங்களைப் பயன்படுத்திக்கூடி சிறப்பாகத் தாளங்களை உருவாக்குவார். ஜாகிர் உசேன், 2023 இல் பத்ம விபூஷன் பெற்றார். மூன்று கிராமி விருதுகள் உட்பட பல பெற்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

44
Ustad Zakir Hussain Legacy

ஜாகிர் உசேன் தனது இளமைப் பருவத்தில் குடும்பத்தின் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இசை ஆர்வத்தில் அர்ப்பணிப்புடன் இருந்தார். அவர் அடிக்கடி ரயிலில் பயணம் செய்தார். சில சமயங்களில் இருக்கை கிடைக்கவில்லை என்றால் ஒரு செய்தித்தாளை விரித்து தரையில் அதன் மீது படுத்துவிடுவார். அப்போதுகூட தபேலாவை பாதுகாப்பாக தன் அருகிலேயே பத்திரமாக வைத்துக்கொள்வார்.

click me!

Recommended Stories