இந்த வீடியோ, எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் திருட்டு குறித்து தேர்தல் ஆணையம் மீது தொடர் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision - SIR) நடவடிக்கையோடு இதை இணைத்துப் பேசுகிறார்.
ஆகஸ்ட் 7 அன்று, ராகுல் காந்தி போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதை நிரூபிக்க கர்நாடகாவில் உள்ள வாக்காளர் பட்டியலை ஆதாரமாகக் காட்டினார். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றப் பிரிவில் 'பயங்கரமான வாக்குத் திருட்டு' நடந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். எனினும், தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.
ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்றும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.