குடியுரிமையை நிரூபிக்க 11 ஆவணங்கள்... தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!

Published : Aug 13, 2025, 06:37 PM IST

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு ஆதரவாகவே இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு ஆவணங்களை ஏற்பதன் மூலம் வாக்களிக்கும் உரிமையை எளிதாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

PREV
14
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) தொடர்பான வழக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு ஆதரவாகவே இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மல்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஆதார் போன்ற குறிப்பிட்ட ஆவணங்களை மட்டும் கட்டாயமாக்காமல், பல்வேறு ஆவணங்களை ஏற்பதன் மூலம், வாக்களிக்கும் உரிமையை எளிதாக்கியுள்ளதாக குறிப்பிட்டது.

24
ஏற்கப்படும் குடியுரிமை அடையாளச் சான்றுகள்

முன்னதாக, ஜார்க்கண்டில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது ஏழு ஆவணங்கள் மட்டுமே அடையாள சான்றுகளாக ஏற்கப்பட்டன. ஆனால், பீகாரில் தற்போது நடைபெறும் சிறப்புத் திருத்தத்தில், வாக்காளர்கள் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

34
குடியுரிமையை நிரூபிக்க கூடுதல் ஆவணங்கள்

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, இந்த செயல்முறை வாக்காளர்களின் தரப்பை முற்றிலும் புறக்கணிப்பதாக வாதிட்டார்.

இதுகுறித்து நீதிபதி பக்சி பேசுகையில், "அடையாள ஆவணங்களின் எண்ணிக்கை விரிவாக்கப்பட்டு உள்ளது. இது வாக்காளர்களை நீக்குவதைக் காட்டிலும், அதிக வாக்காளர்களைச் சேர்ப்பதாகவே உள்ளது. கூடுதல் வாக்காளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது," என்றார்.

"முன்பு ஏழு ஆவணங்கள் மட்டுமே இருந்தன. இப்போது, ஒரு குடிமகன் தன்னை அடையாளப்படுத்த 11 ஆவணங்கள் உள்ளன," என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

44
உச்ச நீதிமன்றத்தின் கருத்து

திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது, ஒருவர் தன்னை ஒரு இந்தியக் குடிமகனாக தாமே அறிவிப்பது சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

குடியுரிமை குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்ற சிங்வியின் வாதத்திற்கும் ஏற்கெனவே பதிலளிக்கப்பட்டது. ஒரு குடிமகனை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும், குடியுரிமை இல்லாதவரை அதிலிருந்து நீக்குவதும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories