பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புறம் 2.0 என்பது, நகரங்களில் சொந்த வீடு இல்லாத EWS, LIG, மற்றும் MIG குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீட்டு வசதி வழங்கும் மத்திய அரசு திட்டமாகும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புறம் 2.0 (PMAY-U 2.0) என்பது நகரங்களில் வாழும், சொந்தமாக நிரந்தர வீடு இல்லாத குடும்பங்களுக்கு மலிவான வீட்டு வசதி கிடைக்க உருவாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ளவர்கள் புதிய வீடு கட்ட, ஏற்கனவே உள்ள வீட்டை வாங்க அல்லது வாடகை வீட்டு வசதியைத் தேர்வு செய்ய நிதி உதவி பெறலாம். 2024ல் தொடங்கிய இந்தத் திட்டம் 2029 வரை ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவில் எங்கும் சொந்தமாக வீடு வைத்திருக்கக் கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும்.
24
மலிவான வீட்டு திட்டம்
இந்தத் திட்டம் நகர்ப்புறங்களில் வசிக்கும் EWS, LIG மற்றும் MIG வருமானப் பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. வீட்டு தேவையைப் பொறுத்து, கட்டுமானம், வாங்குதல் அல்லது வாடகை வீடு என தகுதியான விருப்பத்தை தேர்வு செய்யலாம். வருமான வரம்புகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. EWS பிரிவுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை, LIG பிரிவுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் ரூ.6 லட்சம் வரை, MIG பிரிவுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் இருக்க வேண்டும். இதன் மூலம் உண்மையில் வீட்டு உதவி தேவைப்படுவோருக்கு பயன் சென்று சேரும்.
34
நகர்ப்புற வீட்டு திட்டம்
PMAY-U 2.0l ஜியோ-டேக்கிங் முறை முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் இடத் தகவல்கள் இணைக்கப்படும். இதனால் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை. AHP திட்டங்களில் கட்டுமானத்தின் ஐந்து கட்டங்களிலும் பதிவுகள் செய்யப்படும். திட்ட இடம், கட்டிட எண்ணிக்கை, ஒவ்வொரு கட்டிடத்திலுள்ள வீடுகள் போன்ற விவரங்கள் BHARAT App மூலம் சேகரிக்கப்படும்.
முன்னதாக மாநில கடந்த 20 ஆண்டுகளில் மத்திய, அல்லது உள்ளாட்சி அரசின் எந்த வீட்டு திட்டத்திலிருந்து பயன் பெற்றவர்கள் PMAY-U 2.0க்கு தகுதி இல்லை. முதல் முறையாக வீட்டு உதவி பெறுவோருக்கே இந்தத் திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.