நெட்டிசன் ஒருவர், "மீண்டும் ஒருமுறை, பாகிஸ்தான் ஆட்சி ஆப்கானிஸ்தானின் பாக்டிக்காவில் உள்ள பொதுமக்கள் வீடுகளில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அப்பாவி குழந்தைகள், குடும்பங்களைக் கொன்றது" என்று பதிவிட்டுள்ளார். இதை மறு ட்வீட் செய்யுங்கள், இதனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைத் தாக்கியது என்று உலகம் கூற முடியாது. ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இரு தரப்பிலிருந்தும் மோட்டார் குண்டுகள், வெடிமருந்துகள் அதிக அளவில் வீசப்பட்டுள்ளன.
ஒரு ஆப்கானிஸ்தான் பயனர் எக்ஸ்தளத்தில் "பாகிஸ்தானியர்கள்தான் உண்மையான துரோகிகள். அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தாலும், அவர்கள் இந்தியாவை வெறுக்கிறார்கள். அவர்கள் ஆப்கானிய நிலத்தை ஆக்கிரமித்து, ஆப்கானிஸ்தானில் போரைச் சுரண்டி, இன்னும் நம்மை வெறுக்கிறார்கள். ஒரு நாடு ரத்தக்களரியில் மட்டுமே ஈடுபடும் போது, இஸ்லாத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டதாக எப்படிக் கூற முடியும்? பாகிஸ்தான் நம்மை தொடர்ந்து காயப்படுத்தி வரும் ஒரு அண்டை நாடு’’ என ஆப்கானியர் தெரிவித்துள்ளார்.