இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி கூறுகையில், ''இலங்கைப் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், கண்டுபிடிப்பு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன்புரி உள்ளிட்ட பரந்தளவான விடயங்கள் குறித்து எமது கலந்துரையாடலில் கவனஞ்செலுத்தப்பட்டது.
மிகவும் நெருக்கமான அயல் நாடுகளாக நமது இரு நாட்டு மக்களினதும் அதேபோல பகிரப்பட்ட பிராந்தியத்தினதும் சுபீட்சத்துக்கு நமது ஒத்துழைப்பானது அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது'' என்றார். பிரதமர் மோடி இலங்கை தமிழில் தனது பதிவை வெளியிட்டுள்ளார்.
இனியாவது விடிவு காலம் பிறக்குமா?
மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை பிரதமருடன் மோடி பேசியுள்ள நிலையில், இனியாவது நமது மீனவர்கள் பிரச்சனையில் விடிவு காலம் பிறக்குமா? என்பதை பார்ப்போம். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இது குறித்து இலங்கை பிரதமரிடம் பேசும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.