Published : Oct 17, 2025, 08:26 PM ISTUpdated : Oct 17, 2025, 08:28 PM IST
இந்திய ரயில்வேயின் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 16 பெட்டிகளுடன், கவாச் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் சேவை விரைவில் தொடங்கும்.
இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான, நீண்ட தூர பயணிகளுக்கான 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயிலின் முதல் பார்வை (First-Look) படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற வந்தே பாரத் ரயிலின் தூங்கும் வசதி கொண்ட இந்த புதிய வடிவம், ரயில் பயணத்தின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களுக்கு மாற்றாக வந்த பகல் நேர வந்தே பாரத் ரயில், 700 முதல் 1,200 கி.மீ.க்கு மேல் செல்லும் நீண்ட பயணங்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
24
16 பெட்டிகள்
இந்த ரயில் 16 பெட்டிகளைக் கொண்டிருக்கும். 11 ஏ.சி. 3-டயர் பெட்டிகள், 4 ஏ.சி. 2-டயர் பெட்டிகள் மற்றும் 1 ஏ.சி. முதல் வகுப்பு பெட்டி இருக்கும். சுமார் 1,128 பயணிகள் இதில் பயணிக்க முடியும்.
விரிவான படுக்கைகள், எளிதான படிக்கட்டுகள், மற்றும் நவீன உள்ளமைப்புகள் மூலம் பயணிகளின் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளும் முழு ஏ.சி. வசதி கொண்டவை.
34
ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பம்
இந்தியாவின் ரயில் மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பமான கவாச் (Kavach) இதில் ஒருங்கிணைக்கப்படும். சென்சார் அடிப்படையிலான விளக்குகள், வைஃபை, யூ.எஸ்.பி. சார்ஜிங் மற்றும் பொது அறிவிப்பு அமைப்புகளும் உள்ளன.
இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடியது. பொதுவாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறை உள்பட பல கழிப்பறைகள், தானியங்கி கதவுகள், மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்தும் அமைப்புகளும் இடம்பெறுகின்றன.
ரரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களின் கூற்றுப்படி, இரண்டாவது ரயில் தயாரானவுடன், அதாவது அக்டோபர் 2025-ன் நடுப்பகுதியில் இந்த ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது டெல்லியில் இருந்து அகமதாபாத், போபால் மற்றும் பாட்னா போன்ற இடங்களை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், நீண்ட தூர பயணங்களை மிகக் குறைந்த நேரத்தில் நிறைவு செய்யும். இது சர்வதேச தரத்திலான பயண அனுபவத்தை இந்தியப் பயணிகளுக்குக் வழங்கும் என இந்திய ரயில்வே கருதுகிறது.