மயக்க ஊசி செலுத்தி மனைவி கொலை.. 6 மாதங்களுக்கு பிறகு டாக்டர் கணவர் சிக்கியது எப்படி? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

Published : Oct 17, 2025, 12:53 PM IST

பெங்களூருவில் பெண் மருத்துவர் கிருத்திகா ரெட்டி, உடல்நலக்குறைவால் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு தடயவியல் அறிக்கை மூலம் அவர் மயக்க ஊசி செலுத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

PREV
15
மருத்துவ தம்பதி

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி அய்யப்பா லே-அவுட் 4-வது கிராசில் வசித்து வருபவர் முனிரெட்டி. இவருக்கு நிகிதா மற்றும் கிருத்திகா ரெட்டி (29) என்ற மகள்கள் இருந்தனர். இருவரும் மருத்துவர். இந்நிலையில் கிருத்திகா ரெட்டிக்கும், மகேந்திர ரெட்டிக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி திருமணம் நடைபெற்று பெங்களூருவில் வசித்து வந்தனர். மகேந்திர ரெட்டி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

25
மயங்கி விழுந்து உயிரிழந்த கிருத்திகா ரெட்டி

அதே மருத்துவமனையில் தான் கிருத்திகா ரெட்டியும் மருத்துவராக பணியாற்றினார். இதனிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கிருத்திகா ரெட்டி கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்த போது திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கினார். இதனையடுத்து அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மாரத்தஹள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

35
கிருத்திகா ரெட்டியின் அக்கா புகார்

அப்போது கிருத்திகா ரெட்டி குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அஜீரண கோளாறு, வாயு தொல்லை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்து விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் புகார் அளிக்க முன்வரவில்லை. அப்படி இருந்த போதிலும் போலீசார் வலியுறுத்தலின்பேரில் கிருத்திகா ரெட்டியின் அக்கா நிகிதா புகார் அளித்தார்.

45
6 மாதங்களுக்கு மகேந்திர ரெட்டி கைது

இதனையடுத்து கிருத்திகா ரெட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கிருத்திகா ரெட்டி உயிரிழந்து 6 மாதங்களுக்கு பிறகு அவரது கணவரும் மருத்துவருமான மகேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிருத்திகா ரெட்டி சாவில் 6 மாதங்களுக்கு பின்பு மகேந்திர ரெட்டி சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிருத்திகா ரெட்டியின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டுப்பிடிக்க சில மாதிரிகளை தடய அறிவியல ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது. அதில், கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழக்கவில்லை என்றும், அவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்தது அறிக்கையில் தெரியவந்தது.

55
மயக்க ஊசி செலுத்தி கொலை

மேலும் கிருத்திகா ரெட்டிக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்ததால், அவரை கொலை செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய மகேந்திர ரெட்டி முடிவு செய்துள்ளார். ஆகையால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அவரது தந்தை வீட்டுக்கு வந்த கிருத்திகா ரெட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories