மம்முட்டிக்கு பத்மபூஷன் விருது.. அச்சுதானந்தன் முதல் ரோகித் சர்மா வரை.. பத்ம விருதுகள் முழு லிஸ்ட்!

Published : Jan 25, 2026, 06:55 PM ISTUpdated : Jan 25, 2026, 07:32 PM IST

மலையாள நடிகர் மம்முட்டிக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. இதேபோல் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு பத்ம விபூஷன் விருதும், இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
15
பத்ம விருதுகள் 2026

இந்தியாவில் கலை, சமூகப் பணி, இலக்கியம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

25
மம்முட்டி, ரோகித் சர்மா

கேரள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. இதேபோல் கேரள முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான மறைந்த அச்சுதானந்தன், மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

35
பத்ம விபூஷண் விருதுகள்:

தர்மேந்திர சிங் தியோல் (மறைவிற்குப் பின்) - கலை- மகாராஷ்டிரா

கே. டி. தாமஸ் - பொது விவகாரங்கள் -கேரளா

என். ராஜம் - கலை - உத்தரப் பிரதேசம்

பி. நாராயணன் - இலக்கியம் மற்றும் கல்வி - கேரளா

வி. எஸ். அச்சுதானந்தன் (மறைவிற்குப் பின்) - பொது விவகாரங்கள் - கேரளா

45
பத்மபூசன் விருது அறிவிக்கப்பட்டவர்கள் விவரம்:

அல்கா யாக்னிக் (கலை) - மகாராஷ்டிரா

பகத் சிங் கோஷ்யாரி‍ - உத்தரகண்ட்

கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி - மருத்துவம் -தமிழ்நாடு

மம்மூட்டி - கலை - கேரளா

டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு - மருத்துவம்

பியூஷ் பாண்டே (மறைவிற்குப் பின்) - கலை - மகாராஷ்டிரா

எஸ். கே. எம். மயிலானந்தன்- சமூகப் பணி - தமிழ்நாடு

சதாவதானி ஆர். கணேஷ் - கலை- கர்நாடகா

சிபு சோரன் (மறைவிற்குப் பின்) - பொது விவகாரங்கள்- ஜார்கண்ட்

உதய் கோடக் - வர்த்தகம் மற்றும் தொழில் - மகாராஷ்டிரா

வி. கே. மல்ஹோத்ரா (மறைவிற்குப் பின்) - பொது விவகாரங்கள் - டெல்லி

வெள்ளாப்பள்ளி நடேசன்- பொது விவகாரங்கள் - கேரளா

விஜய் அமிர்தராஜ் - விளையாட்டு 

55
மாதவன், ஹர்மன்ப்ரீத் கவுர்

பத்மஸ்ரீ விருதுகளை பொறுத்தவரை மொத்தம் 113 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர், கலைக்காக தமிழ்நாட்டின் காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன், மருத்துவத்துக்காக எச் வி ஹாண்டே, திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பக்தவச்சலம், கால்நடை விஞ்ஞானி மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், சேலத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர், நீலகிரியைச் சேர்ந்த குரும்பா ஓவியர் ஆர்.கிருஷ்ணன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories