நம் நாட்டில் கோடை காலம், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலம், குளிர் காலம் என நான்கு வகை பருவகாலங்கள் நிலவுகின்றன. தென்மேற்கு பருவமழை, ஜூன் முதல் அக்டோபர் வரையில் நீடிக்கும். பின், வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி வாரம் முதல் ஜனவரி 2ம் வாரம் வரை நிலவும். இதையடுத்து, பிப்ரவரி வரையிலும் குளிர்காலம் நிலவும். இதையடுத்து மார்ச் முதல் ஜூன் முதல் வாரம் வரை கோடை காலம் நிலவும்.