38 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்! அடேங்கப்பா! பயணச் செலவு இத்தனை கோடிகளா? முழு விவரம்!

கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயண செலவு குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இங்கே காணலாம். 

PM Modi's foreign trips: 3 years' expenditure details released ray

PM Modi's foreign trips: 3 years of expenditure information released: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இந்திய தூதரகங்கள் செய்த மொத்த செலவு குறித்த விவரங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்ற மக்களவையில் கோரியிருந்தார். 

PM Modi's Foreign Visits

வெளிநாட்டு பயணங்களின்போது பிரதமரின் ஹோட்டல் ஏற்பாடுகள், சமூக வரவேற்புகள், போக்குவரத்து மற்றும் பிற இதர செலவுகள் போன்ற முக்கிய பிரிவுகளின் கீழ் செலவுகளை விளக்க வேண்டும் என அவர் கேட்டிருந்தார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மோடி மேற்கண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகளை மத்திய இணை அமைச்சர் வழங்கினார்.

பபித்ரா மார்கெரிட்டா அளித்த தரவுகளின்படி, ஜூன் 2023ல் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு ரூ.22,89,68,509 செலவிடப்பட்டது. அதே நேரத்தில் செப்டம்பர் 2024 இல் அமெரிக்காவுக்கு அவர் மேற்கொண்ட பயணத்திற்கு ரூ.15,33,76,348 செலவிடப்பட்டுள்ளது. மே 2023 இல் பிரதமரின் ஜப்பான் பயணத்திற்காக ரூ.17,19,33,356 செலவிடப்பட்டுள்ளது. மே 2022 இல் பிரதமரின் நேபாளப் பயணத்திற்காக ரூ.80,01,483 செலவு செய்யப்பட்டுள்ளது.

சர்க்காடியாவ் ஆப்: 7 நொடியில் இதய நோயை கண்டுபிடிக்கும் 14 வயது சிறுவன்!


PM Modi's foreign trips

2022ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி மேற்கொண்ட ஜெர்மனி பயணம் முதல் 2024ம் ஆண்டு பிரதமர் மோடி மேற்கொண்ட குவைத் வரை 38க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மேற்கொண்ட பயணங்களுக்கான மொத்த செலவு சுமார் ரூ.258 கோடி ஆகும். இதேபோல் 2014 க்கு முன்பு பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஒப்பீட்டு புள்ளிவிவரங்களையும் அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா வழங்கினார். 

Prime Minister Modi's travel expenses

2011ல் பிரதமரின் அமெரிக்கா பயணத்துக்கு ரூ.10,74,27,363 செலவிடப்பட்டுள்ளது. 2013ல் ரஷ்யா பயணத்துக்கு ரூ.9,95,76,890 செலவிடப்பட்டுள்ளது. இதேபோல் 2011ல் பிரான்ஸ் பயணத்துக்கு 8,33,49,463 ரூபாயும், 2013ல் ஜெர்மனி பயணத்துக்கு 6,02,23,484 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் ஒரு கேம் சேஞ்சர்! 'மேட் இன் இந்தியா' அதிநவீன பீரங்கிக்கு ஒப்புதல்!

Latest Videos

vuukle one pixel image
click me!