மைசூர் பாக் இனி இல்லை.! இனிமேல் மைசூர் ஶ்ரீ.! திடீர் பெயர் மாற்றம் என்ன காரணம் தெரியுமா.?

Published : May 23, 2025, 07:13 PM IST

ஜெய்ப்பூர் இனிப்புக் கடை உரிமையாளர் 'மைசூர் பாக்'கை 'மைசூர் ஶ்ரீ' எனப் பெயர் மாற்றியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு மத்தியில் தேசிய உணர்வால் உந்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

PREV
14

இனிப்புகள் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று, லட்டு, குளோப் ஜாமுன், ஜிலேபி, மைசூர்பாக் என தேடித்தடி சாப்பிடுவார்கள். இந்த நிலையில் அதி தீவிர நாட்டுப்பற்றால் மைசூர்பாக் பெயரை மைசூர் ஶ்ரீ என மாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையொட்டி 26 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம், இந்திய வானிலை பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.

24

மேலும் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களையும் இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனையடுத்து இருதரப்பும் எல்லைகளில் ட்ரோன் மூலம் தாக்குதலை நடத்தின. பாகிஸ்தானின் ராணுவதளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இப்படி பரபரப்பான நிலையில் திடீரென இரு ராணுவத்தினரும் தாக்குதலில் நிறுத்துவதாக அறிவித்தனர். இதனால் எல்லையோரங்களில் அமைதி நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் மீதான ஆத்திரம் மட்டும்இந்தியர்களிடம் இன்னும் குறையாமல் உள்ளது.

34

இதனை வெளிக்காட்டும் வகையில் ஜெய்ப்பூரில் உள்ள ஸ்வீட் கடை உரிமையாளர் பாக் என பெயர் கொண்ட இனிப்பு வகைகளின் பெயரை இனி ஸ்ரீ என மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடை உரிமையாளர், மைசூர் பாக் என்ற வார்த்தையிலிருந்து 'பாக்' என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் அந்தப் பெயர் பாகிஸ்தானுடன் தொடர்புடையது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் தேசியவாத உணர்வால் உந்தப்பட்டு, அனைத்து இனிப்புகளிலிருந்தும் 'பாக்' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் கூறினார்.

44

இது தொடர்பாக அந்த ஸ்வீட் கடைக்காரர் கூறுகையில், "எங்கள் இனிப்புப் பெயர்களில் இருந்து 'பாக்' என்ற வார்த்தையை நீக்கியுள்ளோம். 'மோதி பாக்' என்பதை 'மோதி ஸ்ரீ' என்றும், 'கோண்ட் பாக்' என்பதை 'கோண்ட் பாக்' என்றும், 'மைசூர் பாக்' என்பதை 'மைசூர் ஸ்ரீ' என்றும் பெயர் மாற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் உள்ள பெயர்களில் உள்ள 'பாக்'குகளையும் மாற்றுமாறு கிண்டலடித்து வருகிறார்கள். கோடம்பாக்கம் - கோடஸ்ரீக்கம், நுங்கம்பாக்கம் - நுங்கஸ்ரீக்கம், கீழ்ப்பாக்கம் - கீழ்ஸ்ரீக்கம் , பட்டினப்பாக்கம் - பட்டினஸ்ரீக்கம் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories