அரபிக் கடலில் ஷக்தி புயல் காரணமாக மும்பை, கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா? என்பது குறித்து பார்ப்போம்.
அரபிக் கடலில் உருவாகும் 'ஷக்தி' புயல் காரணமாக, இந்த வார இறுதி முழுவதும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் சில பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த சூறாவளியும் உருவாகவில்லை என்றாலும், கொங்கன்-கோவா கடற்கரையில் ஒரு குறைந்த காற்றழுத்த அமைப்பு இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.
24
மும்பை, கோவாவில் அதி கனமழை எச்சரிக்கை
ஏற்கனவே பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் கூடுதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு-மத்திய அரபிக் கடலில் மிதக்கும் குறைந்த காற்றழுத்த அமைப்பு அடுத்த 36 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையக்கூடும்.
இதனால் மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் வார இறுதி வரை மிக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
34
மும்பை, கோவாவுக்கு ரெட் அலர்ட்
''அடுத்த மூன்று நாட்களுக்கு கொங்கன் கோவாவில் மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மகாராஷ்டிரா மற்றும் மேற்கு கடற்கரையின் அருகிலுள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்'' என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி அகில் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
அரபிக் கடலில் ஷக்தி புயல்
அரபிக் கடலில் உருவாகும் 'ஷக்தி' புயலின் பெயரை இலங்கை முன்பொழிந்துள்ளது. ஷக்தி என்றால் தமிழில் வலிமை என்று அர்த்தம். புயல் காரணமாக மும்பை, தானே மற்றும் பால்கருக்கு இப்போது ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு ட்ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மே 22 முதல் 27 வரை மேற்கு-மத்திய அரபிக்கடலின் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் கொங்கன் பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. மே 22 முதல் 24 வரை கொங்கண் மற்றும் கோவாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் "மிகக் கனமழை" பெய்ய வாய்ப்புள்ளது.
இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருவதற்கு வளிமண்டல மற்றும் கடல்சார் நிலைமைகள் சீராக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கினால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.