ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!

Published : Dec 06, 2025, 09:02 AM IST

ரஷ்ய அதிபர் புதினுக்காக ராஷ்ட்ரபதி பவனில் அளிக்கப்பட்ட ராஜவிருந்தில் சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது. இது இந்திய உணவு கலாச்சாரத்தின் முழுமையை பிரதிபலிக்கிறதா என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியது விவாதத்தை உருவாக்கியுள்ளது. 

PREV
13
ராஷ்ட்ரபதி பவனில் ராஜவிருந்து

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா பயணம் செய்ததை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்ட்ரபதி பவனில் இராஜ விருந்தை ஏற்பாடு செய்தார். உலகத் தலைவர்களுக்கு வழங்கப்படும் இத்தகைய விருந்துகள், நாட்டின் கலாச்சாரம், உணவுப் பாணி, மரபுகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெரும் மேடையாக கருதப்படுகின்றன. இவ்வம்சத்தில், இந்த விருந்தில் வழங்கப்பட்ட உணவு முழுமையாக சைவ மெனுவாக இருந்தது. இது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும்  விவாதத்தைத் ஏற்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப. சிதம்பரத்தின் கருத்து பேசுபொருளாக மாறியது.

23
சைவம் மட்டும் இந்தியாவின் கலாசாரமா?

ராஜ விருந்து குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம்,  அதில் சைவம் மட்டும் வழங்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.  விருந்தில் “முழுக்க சைவமா? ஏன்? இந்திய உணவு மரபின் பரந்த பரிமாணத்தை உணர்த்த வேண்டுமானால் மாமிசம், கோழி, கடல் உணவுகள் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் அதேபோல் இந்திய ஓயின்களும் இடம்பெற்று இந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியவின் கலாச்சார உணவுகள், உலகம் முழுவதும் அதன் சுவை, மசாலா, சமையல் முறைகளால் பரவலாக பாராட்டு பெறுகிறது. இந்திய சமையல் என்பது வெறும் சைவ உணவுகளுக்கு மட்டும் அல்ல. பல்வேறு வகையான non-veg உணவுகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோழி, மீன், இறைச்சி வகைகள் பல மாநிலங்களின் அடையாள உணவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீன் குழம்பு, ஆந்திரா கார சிக்கன், பஞ்சாபி பட்டர் சிக்கன், கர்நாடகாவின் மீன் வருவல் போன்றவை இந்தியாவின் உணவு வரைபடத்தில் தனித்துவம் சேர்க்கின்றன.

33
இந்திய உணவின் ருசியை காணவில்லை

அதனால், முக்கிய வெளிநாட்டு விருந்தினரை வரவேற்கும் ஒரு மேடையில் இவற்றையும் இணைத்திருந்தால் இந்திய சமையலின் முழுமையை உலகுக்கு காண்பிக்க முடிந்திருக்குமே என்ற வாதம் எழுகிறது. மற்றொரு பக்கத்தில், சைவ உணவு இந்திய மரபை பிரதிபலிக்கிறது, ஆரோக்கியத்தையும் சமநிலையையும் முன்னிறுத்துகிறது என்ற கருத்தும் உள்ளது. ஆக, காங்கிரஸ் எம்பியின்  இந்த கேள்வி, உணவுபட்டியல் குறித்து மட்டும் அல்ல, இந்திய கலாச்சாரத்தின் பரந்த ருசியை எவ்வாறு உலகிற்கு காட்சிப்படுத்த வேண்டும் என்ற விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories