உத்தரபிரதேசத்தில், அக்கா கணவருடன் தங்கை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதற்கு பழிவாங்கும் நோக்கில், அந்த பெண்ணின் தம்பி, அக்கா கணவரின் தங்கையை அழைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் கமலுபீர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவ் குமார் (28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அதே பகுதியைணு சேர்ந்த மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும் அவருடைய கொழுந்தியாள் அதாவது மனைவியின் தங்கை கல்பனாவுக்கும் (19) பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
24
கள்ளக்காதல்
இவர்களது விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அக்கா கணவர் இப்படி செய்து குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டதால் மைத்துனர் ரவீந்திரன் (22) கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
34
கேசவ் குமார் குடும்பத்தினர் அதிர்ச்சி
எனவே அக்காள் கணவரை பழிவாங்க அவரது குடும்பத்தையும் அசிங்கப்படுத்த வேண்டும் என ரவீந்திரன் திட்டமிட்டார். அவர் ஏற்கனவே கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்துள்ளார். அக்காள் கணவரை பழிவாங்க, அன்று மறுநாளே அவரது தங்கையை அழைத்துக்கொண்டு ரவீந்திரன் ஓட்டம் பிடித்தார். இதனால் கேசவ் குமார் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து இரு குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து இரு ஜோடிகளையும் தீவிரமாக தேடி வந்தனர். ஒரே வழியாக 4 பேரையும் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து இரு குடும்பத்தினரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த சமரசத்தை அடுத்து இரு ஜோடிகளும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.