இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம், பெரிய எழுத்துருக்கள் ஆகியவை வாக்காளர்கள் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காண உதவும்.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகளை வாக்காளர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் மாற்றியமைக்க புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வருகிற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25
வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்
புதிய வழிகாட்டுதலின்படி, வாக்குச்சீட்டுகளில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெறும். புகைப்படம் தெளிவாகத் தெரியும்படி, அதன் முக்கால் பகுதி வேட்பாளரின் முகத்தைக் கொண்டதாக இருக்கும்.
35
பெரிய எழுத்துரு
வேட்பாளர்கள் மற்றும் நோட்டா (NOTA) உட்பட அனைத்து பெயர்களும் ஒரே எழுத்துரு வகையிலும், ஒரே அளவிலும் அச்சிடப்படும். படிக்க எளிதாக இருக்கும்படி, எழுத்துருவின் அளவு 30 மற்றும் தடிமனாக (bold) இருக்கும்.
வாக்குச்சீட்டுகள் 70 மைக்ரான் தடிமன் கொண்ட காகிதத்தில் அச்சிடப்படும். குறிப்பாக, சட்டமன்றத் தேர்தல்களுக்கு இளஞ்சிவப்பு நிற காகிதம் பயன்படுத்தப்படும்.
55
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, வாக்காளர்களுக்கு, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் கல்வியறிவு குறைந்தவர்களுக்கு, வேட்பாளர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் தேர்தல் செயல்முறைகளை மேம்படுத்தி, வாக்காளர்களுக்கு வசதிகளை அதிகரிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 28 நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.