கைது செய்யப்பட்ட தயாளி உப்பாலிடம் இருந்து இராணுவ சீருடைகள், மேஜர் அமித் மற்றும் மேஜர் ஜோசப் பெயர்களில் போலி பெயர் பலகைகள், தேசிய புலனாய்வு முகமை (NIA), எல்லைப்புற இராணுவம் (Territorial Army) மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை உள்ளிட்ட மத்திய காவல் அமைப்புகளின் போலி அடையாள அட்டைகள், போலி அடையாள அட்டைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அச்சிடும் தாள்கள், அச்சிடும் இயந்திரம், பதக்கங்கள், போலி ஆதார் அட்டை மற்றும் போலி கைத்துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
தயாளி உப்பால், தான் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், மேட்ரிமோனி தளங்கள் மூலம் அவர்களை ஏமாற்றி பணம் பறித்ததாகவும் ஒப்புக்கொண்டார். இராணுவ அதிகாரிகளின் அடையாள அட்டைகளை இணையத்தில் தேடி, அவற்றை தாமே அச்சிட்டு, பெண்களைக் கவர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் இராணுவத்தில் இல்லை என்று எவரும் சந்தேகம் கொள்ளாதபடி, இராணுவ சீருடைகள், பதக்கங்கள் மற்றும் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.