பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய போக்குவரத்து சாதனங்களில் ரயில்வேயும் ஒன்று. நீண்ட தூர பயணங்களுக்கு இதுவே வசதியானது என்று பல பயணிகள் கருதுகின்றனர். இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக, நாடு முழுவதும் பயணிகள் மற்றும் சரக்குகளை அதிவேகமாக, பாதுகாப்பாக மற்றும் குறைந்த செலவில் கையாளும் போக்குவரத்து முறையாக விளங்குகிறது.
இந்திய ரயில்வே 1,21,000 கிலோ மீட்டர் நீளமான பாதைகளை கொண்டுள்ளது, இதில் 7,500 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த துறை தினசரி சுமார் 23 மில்லியன் பயணிகளையும், 3 மில்லியன் டன் சரக்குகளையும் கையாள்கிறது. இத்தனை பெரிய அமைப்பினை பராமரிப்பது மிகவும் சிக்கலானது, ஆனாலும் இவை தொடர்ந்து சீரமைப்பு செய்யப்பட்டு தொழில்நுட்ப மேம்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளில், இந்திய ரயில்வே துறையில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் நிகழ்ந்துள்ளன. ரயில்கள் அதிவேகமாக இயங்குவதற்காக மின்சார மற்றும் சோலார் ஆற்றல் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிக்கெட் புக்கிங், ஆன்லைன் சேவைகள் மற்றும் பயணிகள் வசதிகளுக்காக புத்துணர்வான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம். எத்தனை வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று. இந்திய ரயில்வே விதிகளைப் பார்த்தால் இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும்.
சிலர் ரயில்வே விதிகள் தெரியாமல் சிறு குழந்தைகளுக்கும் பெரியவர்கள் விலையில் டிக்கெட் வாங்குகிறார்கள். ஆனால் சில வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை. இலவசமாகவே பயணம் செய்யலாம். மேலும் சில வயது குழந்தைகளுக்கு பாதி டிக்கெட் எடுத்தால் போடும். இந்த விதிகள் பற்றி விவரமாக தெரிந்து கொள்வோம்.
இந்திய ரயில்வே குழந்தைகள் டிக்கெட்டுகளுக்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த டிக்கெட்டும் வாங்க வேண்டியதில்லை. நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்.
இந்திய ரயில்வே விதிகளின்படி, 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுப்பது கட்டாயம். ஸ்லீப்பர் பெட்டிகளில் உங்கள் குழந்தைகளுக்கு சீட் தேவையில்லை என்றால் பாதி டிக்கெட் எடுக்கலாம். பாதி டிக்கெட் எடுத்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் இருக்கையிலேயே அமர வைக்க வேண்டும். பாதி டிக்கெட் எடுத்தாலும் குழந்தைகளுக்கு தனி இருக்கை ஒதுக்கப்படாது.
5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி பெர்த்(Bearth) தேவைப்பட்டால் முழு டிக்கெட் வாங்க வேண்டும். முன்பதிவு செய்யும் போது 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விவரங்களையும் அளிக்க வேண்டும். இதற்கு எந்த கட்டணமும் இல்லை. சாதாரண பயணத்தில், அதாவது ஜெனரல் பெட்டியில் 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதி டிக்கெட் எடுக்க வேண்டும்.
அதேவேளையில், இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் தங்களது பயணங்களை வசதியாக செய்யும் வகையில், ரயில்வே நிறுவனத்தால் சில சிறப்பு விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள் சலுகைகள்
ஆண்கள்: 60 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு 40% வரை டிக்கெட் கட்டண சலுகை கிடைக்கிறது.
பெண்கள்: 58 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 50% வரை டிக்கெட் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
வயது சான்றிதழ்: மூத்த குடிமக்கள் சலுகையைப் பெற, ரயில் டிக்கெட் பதிவு செய்யும்போது தங்களது வயது குறித்த சான்று தேவையாகும். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை வயது சான்றாக பயன்படுத்தலாம். மூத்த குடிமக்கள் ஆன்லைன் மற்றும் கவுண்டரில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். ஆன்லைன் பதிவு செய்யும்போது IRCTC இல் வயது பதிவு செய்யப்பட்டு, தேவையான சலுகை தானாகவே வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்காக சில ரயில்களில் குறிப்பிட்ட இடங்கள் (seats) ஒதுக்கீடு செய்யப்படும். இது அவர்களுக்கு பயணத்தை இலகுவாக மற்றும் பாதுகாப்பாக மாற்ற உதவும். மேலும், பிளாட்ஃபாரங்களில் அல்லது ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு நுழைய மற்றும் நடக்க உதவும் சிறப்பு வசதிகள் சில ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளன.
(Concessional Tickets): மொத்த கட்டணத்தில் சலுகை பெற மூத்த குடிமக்கள் பயணிகள், ஜெர்னல், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பிரிவுகளில் பயணிக்கலாம். மேலும் சில ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்காகச் சக்கர நாற்காலிகள் (wheelchairs) மற்றும் தளவாட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
IRCTC ஆன்லைன் தளம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, மூத்த குடிமக்கள் சலுகையைத் தேர்ந்தெடுக்க முடியும். அதற்குப் பிறகு, தங்கள் பயணத்தை உறுதிப்படுத்த டிக்கெட் தோற்றத்தில் சலுகை விவரங்கள் காணப்படும். இந்த விதிகள் மூத்த குடிமக்கள் இந்திய ரயில்வேயை பயன்படுத்தும் போது அவர்களுடைய பயண அனுபவத்தை மிகுந்த வசதியாகவும், பாதுகாப்பாகவும் மாற்ற உதவுகின்றன.
ரயில் டிக்கெட் வாங்கும்போது சில்லறை பிரச்சனை இனி இல்லை.. ரயில்வேயில் வேற லெவல் அம்சம்!
இந்திய ரயில்வே துறை முன்னேற்றம் பெற்றாலும், இது சில முக்கிய சவால்களையும் எதிர்கொள்கிறது. பாதுகாப்பு, பராமரிப்பு, பயணிகள் துயரங்கள், பணம் குறைவு, மற்றும் மோசமான அடித்தளம் போன்றவற்றில் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இந்த சவால்களை சமாளிக்க விரிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்திய ரயில்வே துறை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் மாபெரும் பங்களிப்பு செய்துவருகிறது. அடுத்தகாலத்தில் மேலும் பல சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் கொண்டு வரப்பட்டு, இது உலகின் முன்னணி போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த ஒரு சிறப்பு டிக்கெட் போதும்; வெவ்வேறு வழித்தடங்களில் 56 நாட்கள் பயணிக்கலாம்!