இனி இஷ்டத்துக்கு வசூலிக்க முடியாது! வெச்சிட்டாங்க செக்! 'ஒரு நகரம், ஒரு கட்டணம்' அமல்!

First Published Sep 3, 2024, 3:22 PM IST

பெங்களூரு முழுவதும் டாக்ஸி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஓலா, உபெர் போன்ற தனியார் வாகனங்களும் இதனை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

One city, one fare

பெங்களூரு, இந்தியாவின் சிலிக்கான்வேலி என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இங்குதான் உள்ளன. ஐடி ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் சிறு பயணத்திற்கும் டாக்ஸியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், டாக்ஸி கட்டணங்கள் வரம்பற்று உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து, நகரம் முழுவதும் சீரான டாக்ஸி கட்டணங்களை வலியுறுத்தி தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து '' ஒரு நகரம் ஒரு டாக்ஸி'' முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆய்வுகளை மேற்கொண்டு வந்த போக்குவரதுறை பெங்களூரு நகரம் முழுவதும் டாக்ஸி கட்டணங்களை தரப்படுத்த கர்நாடக போக்குவரத்துத் துறையின் 'ஒரு நகரம், ஒரு கட்டணம்' கொள்கை அமல்படுத்தியுள்ளது.

அதாவது, வாகன மதிப்பின் அடிப்படையில் அடுக்கடுக்கான விலை நிர்ணயம், சாமான்கள் கொண்டு செல்வதில் வரைமுறை மற்றும் காத்திருப்பு நேரத்திற்கான கூடுதல் கட்டணங்கள் மற்றும் 10% இரவு நேரக் கட்டணம் ஆகியவை எல்லாம் கணக்கில் கொண்டு இந்தக் கொள்கையானது பெங்களூரு நகரம் முழுவதும் டாக்ஸி கட்டண வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.

One city, one fare

'ஒரு நகரம், ஒரு கட்டணம்

பெங்களூரு முழுவதும் ஓலா, உபெர் உள்ளிட்ட அனைத்து தனியார் டாக்ஸி சேவைகளுக்கு 'ஒரு நகரம், ஒரு கட்டணம்' கொள்கையை கர்நாடக போக்குவரத்து துறை அறிறித்துள்ளது. மாநிலம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அமைப்பு பெஙு்களூரு நகரத்திலும் சீராகப் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்த நடவடிக்கை வலியுறுத்துகிறது. நகரம் முழுவதும் பொதுமக்களை திருப்தி படுத்தும் வகையில் சீரான டாக்ஸி கட்டணங்களை வலியுறுத்தி தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

10 லட்சத்திற்கும் குறைவான கார்கள்

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள டாக்ஸிகளுக்கு, முதல் 4 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப 4 கி.மீ.க்குப் பிறகு, பயணிகளிடம் இருந்து ஒரு கி.மீ.க்கு ரூ.24 வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வு அமைப்பு செலவுகளை தரப்படுத்தவும், பயணிகளுக்கு தெளிவை வழங்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

10-15 லட்சம் மதிப்புள்ள கார்கள்

ரூ.10 லட்சத்திற்கும் ரூ.15 லட்சத்திற்கும் இடைப்பட்ட விலையில் உள்ள கார்களுக்கு, முதல் 4 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.115 எனவும் போக்குவரத்துத் துறை நிர்ணயித்துள்ளது. இந்த தூரத்திற்குப் பிறகு, ஒரு கி.மீ.க்கு ரூ.28 கட்டணம் வசூலிக்கப்படும், இது நடுத்தர வகை டாக்சிகளுக்கு சமச்சீரான கட்டணத்தை உறுதி செய்கிறது.

Latest Videos


One city, one fare

15 லட்சத்திற்கும் அதிகமதிப்புள்ள கார்கள்

ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள டாக்சிகளுக்கு முதல் 4 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.130 ஆக இருக்கும் எனவும். அதன் பிறகு, பயணிகளிடமிருந்து ஒரு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.32 வசூலிக்கப்படும். இந்த உயர் விலை நிர்ணயம் பிரீமியம் வாகனங்களின் உயர் சேவை தரத்தை பிரதிபலிக்கிறது.

லக்கேஜ் சார்ஜ்

பயணிகள் 120 கிலோ வரை கூடுதல் கட்டணம் இல்லாமல் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், இந்த வரம்பை மீறும் பொருட்களுக்கு, ஒவ்வொரு 30 கிலோவுக்கும் ரூ.7 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். கனமான சுமைகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் விலையுயர்ந்த சொகுசு ரயில் இதுதான்.. டிக்கெட் விலைக்கு ஒரு காரையே வாங்கலாம்!

காத்திருப்பு கட்டணம்

இந்த ஒரு நகரம் ஒரு கட்டணம் கொள்கையில் காத்திருப்பு நேரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. கார் காத்திருக்கும் முதல் ஐந்து நிமிடங்களுக்கு இலவசம். அதன் பிறகு, ஒவ்வொரு கூடுதல் நிமிடத்திற்கும் பயணிகளிடமிருந்து 1 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த காத்திருப்பு நேரக் கட்டணம் நீண்ட நேரம் காத்திருப்பதற்கு ஓட்டுநர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது.

One city, one fare

நள்ளிரவு பயணக் கட்டணம்

பெங்களூரு நகரில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலான பயணங்களுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் கூடுதல் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் கட்டணம் ஓட்டுநர்களுக்கு இரவு நேரங்களில் இயங்குவதற்கு இழப்பீடு வழங்குகிறது. மேலும், இது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.

பயணத்தின் போது வரும் வழியில் டோல் கட்டணங்களை பயணிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பயணித்த கிலோமீட்டர்களின் அடிப்படையில் மட்டுமே கட்டணம் கணக்கிடப்பட வேண்டும் என்றும், அரசாங்கத்தின் விலை விகிதங்களுக்கு மேல் எந்தக் கூடுதல் கட்டணமும் அனுமதிக்கப்படாது என்றும் போக்குவரத்துத் துறை வலியுறுத்தியுள்ளது. கட்டணக் கணக்கீடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை இந்த ஒரு நகரம் ஒரு கட்டணம் கொள்கை உறுதி செய்கிறது.

பெங்களூரு நகரில் ஓலா, உபெர் உள்ளிட்ட தனியார் கார் சேவை நடத்துனர்களும் இந்த அரசு வரம்பினுள் கட்டணங்களை மாற்றி அமைத்து வசூலிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற திட்டத்தை தமிழ்நாட்டிலும் அமல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என சென்னை ஐடி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

click me!