கடந்த செப்டம்பர் 2ம் தேதி (நேற்று) வரை, ஆந்திராவின் குண்டூர், அமராவதி, மங்களகிரி பாபட்லா மற்றும் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு பல சாலைகளும், ரயில் பாதைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்கள் வழியாக செல்லக்கூடிய சுமார் 140 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கனமழை காரணமாக சுமார் 5 மாவட்டங்களில் இருந்து 290க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த 13,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.