வெறும் ஒரு ரூபாய்க்கு விமானத்தில் பயணிக்கலாம்.! சிறப்பு சலுகை- டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி.?

Published : Oct 23, 2025, 02:03 PM IST

IndiGo Infant Flight Offer : விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது அனைவரின் கனவு. ஆனால், அதிக கட்டணம் காரணமாக பலருக்கு இது கனவாகவே இருந்துவிடுகிறது. இந்நிலையில், பிரபல விமான நிறுவனமான இண்டிகோ ஒரு சூப்பரான வாய்ப்பை வழங்கியுள்ளது. 

PREV
15
ரூபாய்க்கே விமானப் பயணம்

இண்டிகோ நிறுவனம் குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 'Infant Fly at Rs.1' என்ற பெயரில், 0-24 மாத குழந்தைகள் வெறும் 1 ரூபாயில் பயணிக்கலாம். இந்த சலுகை நவம்பர் 30, 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

25
யார் தகுதியானவர்கள்?

3 நாட்கள் முதல் 2 வயது (24 மாதங்கள்) வரையிலான குழந்தைகள் தகுதியானவர்கள். செக்-இன் போது வயதுச் சான்றிதழ்களை காட்ட வேண்டும். பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவை ஏற்கப்படும். இல்லையெனில் முழு கட்டணம் செலுத்த வேண்டும்.

35
டிக்கெட் எப்படி புக் செய்வது?

இந்த சலுகை இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான (goIndiGo.in) மூலம் மட்டுமே கிடைக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்து, பயணத்தின் போது வயதுச் சான்றிதழ்களைக் காட்ட வேண்டும்.

45
எத்தனை குழந்தைகளுக்கு அனுமதி?

ஏர்பஸ் A320: அதிகபட்சம் 12 குழந்தைகள்.

ATR விமானங்கள்: அதிகபட்சம் 6 குழந்தைகள்.

ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

55
பெற்றோருக்கான வசதி

குழந்தைகளுடன் பயணம் செய்வது சவாலானது. எனவே, பெற்றோரின் சுமையைக் குறைக்க இண்டிகோ இந்த சலுகையை வழங்குகிறது. விமானத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரம் அடிப்படை கட்டணம் ஒரு ரூபாயாக இருந்தாலும் வரியாக குறைந்தபட்சமாக கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories