10 நகரங்களுக்கு விமானங்களை ரத்து செய்த இண்டிகோ; சென்னை லிஸ்டில் இருக்கா?

Published : May 09, 2025, 01:18 PM IST

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, இண்டிகோ 10 நகரங்களுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PREV
14
10 நகரங்களுக்கு விமானங்களை ரத்து செய்த இண்டிகோ; சென்னை லிஸ்டில் இருக்கா?
Indigo Flight Cancellations

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்திகோ 10 நகரங்களுக்கு விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்த நகரங்களிலிருந்து மே 10, 2025 நள்ளிரவு 11:59 மணி வரை விமானங்கள் இயக்கப்படாது.

24
இண்டிகோ விமானங்கள் ரத்து

பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் என்று இண்டிகோ சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானேர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

34
10 நகரங்களுக்கு விமான சேவை நிறுத்தம்

தற்போதைய சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

44
ஸ்ரீநகர் விமான நிலையம் மூடல்

இதையடுத்து, ஸ்ரீநகர் விமான நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மூடப்பட்டுள்ளது. மேற்கண்ட விமான சேவை நிறுத்த பட்டியலில் சென்னை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories