ரெட் அலர்ட்: பாகிஸ்தான் உடனான மோதல் காரணமாக உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு இப்போது முழு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம்-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. இந்தியா தரப்பிலும் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உச்சபட்ச எச்சரிக்கை
உத்தரப் பிரதேச டிஜிபி பிரசாந்த் குமார், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சிறப்பு விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, மேலும் உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன.