இந்திய ரயில்வே, 'ரயில்ஒன்' செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு 3% தள்ளுபடி அறிவித்துள்ளது. யுபிஐ, டெபிட்/கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்தும்போது இந்தச் சலுகை கிடைக்கும்.
ரயில் பயணிகளிடையே டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், இந்திய ரயில்வே அமைச்சகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 'ரயில்ஒன்' (RailOne) செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகளை வாங்கும்போது 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24
3 சதவீத தள்ளுபடி யாருக்குக் கிடைக்கும்?
தற்போது வரை, ரயில்ஒன் செயலியில் உள்ள 'R-wallet' மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே 3 சதவீத கேஷ்பேக் (Cashback) வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், புதிய அறிவிப்பின்படி, யுபிஐ (UPI), டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் என எந்தவொரு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தினாலும், டிக்கெட் விலையில் நேரடியாக 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
34
சலுகை பெறுவதற்கான நிபந்தனைகள்
இந்தத் தள்ளுபடிச் சலுகை 2026, ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும்.
இந்தச் சலுகை 'ரயில்ஒன்' (RailOne) செயலியில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற இணையதளங்களிலோ அல்லது கவுண்ட்டர்களிலோ இந்தத் தள்ளுபடி கிடைக்காது.
ஏற்கனவே வழக்கத்தில் உள்ள 'R-wallet' மூலமான 3 சதவீத கேஷ்பேக் வசதி இதனுடன் சேர்த்துத் தொடர்ந்து செயல்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளை, காகிதமில்லா மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற்ற இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காகத் தேவையான மென்பொருள் மாற்றங்களைச் செய்ய ரயில்வே தகவல் அமைப்பு மையத்திற்கு (CRIS) அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வரும் மே மாதம் இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் பிறகு இது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.