Bike Parcel: படிப்பு, வேலை, பிசினஸ்னு பல காரணங்களுக்காக நாம ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்குப் போவோம். அப்போ நம்ம பைக்கையும் கூடவே கொண்டு போக வேண்டியிருக்கும். இதுக்கு ரயில்வே பார்சல் சர்வீஸ் ஒரு நல்ல சாய்ஸ்.
கட்டணம் பைக் எடை, தூரத்தைப் பொறுத்து மாறும். உதாரணமா, 500 கி.மீ. தூரத்துக்கு சுமார் ₹1,200 ஆகலாம். தூரம் அதிகமானா, கட்டணமும் அதிகமாகும். பைக்கை பேக்கிங் செய்ய தனியா ₹300 முதல் ₹500 வரை செலவாகும்.
55
புக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
புக் பண்றதுக்கு ஒரு நாள் முன்னாடியே பிளான் பண்ணுங்க. RC, இன்சூரன்ஸ், ஆதார் கார்டு எல்லாம் கைல வெச்சுக்கோங்க. மிக முக்கியமா, பெட்ரோல் டேங்க்ல ஒரு சொட்டு பெட்ரோல் கூட இருக்கக் கூடாது. பாதுகாப்புக்காக இந்த விதிமுறை ரொம்ப முக்கியம். மீறினால் அபராதம் விதிக்கப்படலாம். பிரைவேட் டிரான்ஸ்போர்ட்டை விட இது ரொம்பவே மலிவானது.