சட்டத்தின்படி, ஒரு கணவர் மது அருந்துவது மட்டும் குற்றமல்ல. ஆனால், அந்த மதுவின் போதையில் அவர் தனது மனைவியிடம் நடந்துகொள்ளும் முறைதான் சட்டத்தின் பிடியில் சிக்கக்கூடும்.
பிரிவு 85-இன் படி, ஒரு கணவர் மது அல்லது போதைப் பொருட்களை உட்கொண்ட பிறகு:
- தன் மனைவியைக் கடுமையான உடல் ரீதியான அல்லது மன ரீதியான கொடுமைக்கு உள்ளாக்கினால்,
- வீட்டில் தேவையற்ற குழப்பங்களை அல்லது வன்முறையை உருவாக்கினால்,
- மனைவியின் பாதுகாப்பு, மன அமைதி அல்லது சுயமரியாதைக்கு ஆபத்தை விளைவித்தால்,
இவற்றை அடிப்படையாகக் கொண்டு, மனைவி தனது கணவர் மீது காவல் நிலையத்தில் FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய சட்டத்தில் இடமுண்டு.
தண்டனை விவரம்
மேற்கூறியவாறு சட்ட விரோதமாக நடந்துகொள்ளும் கணவருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். அதாவது, மது அருந்துதல் என்பது குற்றமல்ல; மது அருந்திய பின் மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகளே தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதையும் படிங்க : கணவர் இல்லாமல் வாழும் தமிழ்ப் பெண்கள் : இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் டாப்! அதிர்ச்சியூட்டும் உண்மை!