3 வருடத்தில் 155 செயற்கைக்கோள்களை ஏவும் திட்டம்! இஸ்ரோ தலைவர் பெருமிதம்

Published : Jul 13, 2025, 02:55 PM IST

இஸ்ரோ அடுத்த மூன்று ஆண்டுகளில் 155 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. 2040 ஆம் ஆண்டில் இந்தியர்களை நிலவில் தரையிறக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.

PREV
14
155 செயற்கைக்கோள்கள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 155 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். அத்துடன், 2040-ல் இந்தியர்கள் நிலவில் தரையிறங்கும் ambitious திட்டத்திற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

குலசேகரத்திலுள்ள ஒரு கல்லூரியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி விவரித்தார்.

24
சுபான்ஷு சுக்லா

"1984 ஆம் ஆண்டில் இந்தியரான ராகேஷ் சர்மா ரஷ்யா மூலம் விண்வெளிக்குச் சென்றார். அதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. நமது இந்திய மண்ணில் இருந்து ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பினால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில், சுபான்ஷு சுக்லாவை முதலில் அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளோம். அவர் வந்த பிறகு அவருக்கு கிடைத்த அனுபவங்கள் நமக்கு பெரும் உதவியாக இருக்கும். 2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்தியர்கள் தரையிறங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று அவர் கூறினார்.

34
2035-ல் இந்திய விண்வெளி நிலையம்

முன்னதாக கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “2035 ஆம் ஆண்டில் விண்வெளியில் நாம் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க உள்ளோம். 2040 ஆம் ஆண்டில் இந்தியரை நமது ராக்கெட் மூலம் சந்திரனுக்கு அனுப்பி, திரும்பி கொண்டு வர வேண்டும் என்று நமது பிரதமர் கூறியுள்ளார். இதற்காக 40 மாடி கட்டிடம் போன்ற உயரமுள்ள ஒரு ராக்கெட்டை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. 2600 டன் எடையுள்ள அந்த ராக்கெட், 75 ஆயிரம் கிலோ எடையை சுமந்து மேலே செல்லும்.” எனக் கூறினார்.

44
2040-ல் சந்திரனுக்குச் செல்லும் இந்தியர்கள்

"இன்னும் 3 ஆண்டுகளில் இஸ்ரோவில் இருந்து 155 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டங்கள் உள்ளன. மாணவர்கள் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும்," என்று மாணவர்களிடம் ஊக்கத்துடன் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories