600 ஆண்டு பழமையான கோயிலில் பின் ஹோல் கேமரா தொழில்நுட்பம்!

Published : Jul 12, 2025, 11:08 PM ISTUpdated : Jul 12, 2025, 11:30 PM IST

ஹம்பி விருபாக்‌ஷா கோயிலில், பண்டைய பின்ஹோல் கேமரா விளைவு மூலம் கோபுரத்தின் தலைகீழ் பிம்பம் உருவாகிறது. இந்த 600 ஆண்டுகால அதிசயம், பண்டைய இந்தியர்களின் அறிவியல் அறிவையும் கட்டிடக்கலைத் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

PREV
15
ஹம்பி கோயிலில் உள்ள அதிசயம்

இந்தியா பல அற்புதமான கோயில்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் தனித்துவமான கதை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. சில கோயில்கள் அவற்றின் பிரம்மாண்டத்திற்கு மட்டுமில்லாமல், அவற்றின் அறிவியல் அம்சங்களால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. இந்த அதிசயங்களில், கர்நாடகாவில் உள்ள ஹம்பி கோயில், அதன் ஆன்மீக முக்கியத்துவத்துடன் மட்டுமல்லாமல், பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு ஆச்சரியமான இயற்கை நிகழ்வாலும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

இக்கோயிலில் ஒரு அறிவியல் தத்துவம் உள்ளது, இது அதன் உயரமான கோபுரத்தின் தலைகீழ் பிம்பத்தை உருவாக்குகிறது. கலையும் அறிவியலும் ஒன்றிணையும் இந்த இடம் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

25
ஹம்பி கோயிலின் 600 ஆண்டு கால 'பின்ஹோல் கேமரா'

கர்நாடகாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ஹம்பியில் விருபாக்‌ஷா கோயில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்ட இந்த கோயில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இந்தக் கோயில் ஒரு கட்டிடக்கலை அதிசயமாகவும் புகழ்பெற்றுள்ளது. குறிப்பாக, கோயிலின் பிரம்மாண்டமான ராஜகோபுரத்தின் தலைகீழ் பிம்பம் ஒரு சிறிய இருண்ட அறைக்குள் தோன்றும் வகையில் 'பின்ஹோல் கேமரா' தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

கோயிலின் சுவரில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக இந்த விளைவு ஏற்படுகிறது. இந்தத் துளை கேமராவில் உள்ள அப்ரசர் (aperture) போல செயல்படுகிறது. அறிவியல் கோட்பாடுகளின்படி, ஒளி ஒரு சிறிய துளை வழியாகச் செல்லும்போது, அது வெளிப்புறப் பொருளின் தலைகீழ் பிம்பத்தை உள்பகுதியில் தோற்றுவிக்கிறது. இது கேமரா ஆப்ஸ்குரா (camera obscura) போன்றது.

35
பின் ஹோல் கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?

கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மங்கலான வெளிச்சம் கொண்ட இந்த இடத்தில், உயரமான கோபுரத்தின் தலைகீழ் பிம்பம் எதிர் சுவரில் தெளிவாகப் பிரதிபலிப்பதைக் கண்டு அடிக்கடி ஆச்சரியப்படுகிறார்கள். அறை பெரும்பாலும் இருட்டாக இருப்பதால், சிறிய துளை மூலம் உருவாகும் கோபுரத்தின் பிரகாசமான பிம்பம் தெளிவாகத் தெரிகிறது.

இந்த ஒளியியல் நிகழ்வு தற்செயலானது அல்ல. ஒளி மற்றும் இயற்பியல் பற்றிய ஆரம்பகால அறிவின் அடையாளம் ஆகும். இந்த ஒளியியல் நிகழ்வுக்கு சிறிய துளைக்கும் (pinhole) பிம்ப மேற்பரப்புக்கும் இடையிலான தூரம் மிக முக்கியமானது. மேலும் தெளிவான தலைகீழ் பிம்பத்தை உருவாக்க துளையின் அளவு இந்த தூரத்தில் சுமார் 1/100 ஆக இருக்க வேண்டும்.

45
விருபாக்‌ஷா கோயிலின் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம்

விருபாக்‌ஷா கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். சிவனின் ஒரு வடிவமான விருபாக்‌ஷருக்காக எழுப்பப்பட்ட இந்தக் கோயில், 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயிலின் பகுதிகள் சாளுக்கிய, ஹோய்சாள மற்றும் விஜயநகரப் பேரரசுகளால் வெவ்வேறு காலத்தில் கட்டப்பட்டவை. ஹம்பியில் பல நூற்றாண்டுகளாக பழமை மாறாமல் அப்படியே இருக்கும் சில கட்டமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

விருபாக்‌ஷா கோயில் பக்தர்கள் அதிக அளவில் வருகைதரும் ஆன்மிக யாத்திரை தலமாகவும் உள்ளது. கோயில் வளாகத்தில் பல கட்டிடக்கலை சிறப்பம்சங்கள் உள்ளன. சுமார் 50 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்டமான ஒன்பது அடுக்கு கிழக்கு கோபுரம், விரிவான தூண்கள் மற்றும் முற்றங்கள் ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. விஜயநகர ஆட்சியாளர்கள், குறிப்பாக கிருஷ்ணதேவராயர், 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இக்கோயிலை விரிவாக்கம் செய்தார். கோயிலை கலையழகு மிளரும் வகையில் அலங்கரிப்பதில் கவனத்தைச் செலுத்தினார்.

55
கட்டிடக்கலை மற்றும் கணிதம்

கோயிலின் வடிவமைப்பில் ஃபேக்டல்ஸ் (fractals) போன்ற கணிதக் கருத்துகள் பயன்பட்டிருப்பதாகவும் கட்டடக்கலை வல்லுநர்கள் கூறுகின்றனர். இது விருபாக்‌ஷா கோயிலின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்று. கோயிலின் முக்கோண அமைப்பு, மேலே பார்க்கும்போது பிரிந்து மீண்டும் மீண்டும் வரும் வடிவங்களைக் கொண்டதாக உருவாகியுள்ளது.

இந்த அதிசயமான கோயில், இந்தியர்களின் பழமையான அறிவியல் அறிவையும், கட்டிடக்கலைத் திறனையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories