1980 முதல் செப்டம்பர் மாதத்தில் மழையின் அளவு அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை விலகும் தேதி செப்டம்பர் 1-ல் இருந்து செப்டம்பர் 17 ஆக மாற்றப்பட்டதும் இதற்கு ஒரு சான்றாகும்.
இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, இந்தியாவில் 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, இது இயல்பை விட 6% அதிகம். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் வடமேற்கு இந்தியா மற்றும் தீபகற்ப தென்னிந்தியாவில் வழக்கத்தை விட 31% அதிக மழை பெய்துள்ளது.
இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, மாநில அரசுகளும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளும் உஷார் நிலையில் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.