அதாவது, ஆண்களை ஏமாற்றுவதற்காகவே அழகான கல்லூரிப் பெண்களை உணவகங்கள், பார்கள் பயன்படுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போதைய காலத்தில் இருக்கும் சில நவநாகரீக பெண்களுக்கு கேளிக்கை செய்ய பணம் கிடைத்தால் போதும், அவர்கள் எந்த வேலையையும் செய்யத் தயங்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களையே உணவகங்கள் பணியமர்த்துகின்றன. பெரிய வருமானம் ஈட்டுவதாக ஆசை காட்டப்படுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் பெரிய வேலையையும் செய்ய வேண்டியதில்லை.