மேலும் துபாயில் வசிக்கும் தனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்கும்படி எனக்கு எனது கணவர் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் சொல்வதை கேட்டு நடக்காவிட்டால் விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டுகிறார். மேலும் முதல் திருமணத்தை மறைத்து விட்டு, 2-வதாக என்னை திருமணம் செய்திருக்கிறார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்தார். பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்க நகைகளை கேட்டு மிரட்டுகிறார். சில நேரங்களில் அடித்து துன்புறுத்துவார். பொது இடங்களில் கூட என்னை அடித்து தாக்கியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து கணவர் சையது இனாமுல் (35) என்பவரை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர்.