ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது, அதாவது UIDAI. ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். இது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டையின் உதவியுடன் புதிய சிம்கார்டு வாங்குவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, அரசின் மானியத்துக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும், ஆதார் அட்டையின் உதவியுடன் பாஸ்போர்ட் பெறலாம். இப்படி பல முக்கிய விஷயங்களுக்கு ஆதார் பயன்படும் நிலையில், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் தவறாக இருந்தால், அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.
பிறந்த தேதி, செல்போன் எண் மற்றும் முகவரி ஆகியவற்றை ஆதார் அட்டையில் புதுப்பிக்கலாம். UIDAI இணையதளத்தின் உதவியுடன் myAadhaar போர்ட்டலில் இருந்து ஆதாரை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். தற்போது, எந்த கட்டணமும் இல்லாமல் பயனர்கள் ஆதாரை புதுப்பிக்க முடியும்.