ஹெச்.ஐ.வி-க்கு முற்றுப்புள்ளி! ஆண்டுக்கு 2 முறை மலிவு விலையில் தடுப்பூசி!

Published : Sep 24, 2025, 08:50 PM IST

யுனிடேடு மற்றும் கேட்ஸ் ஃபவுண்டேஷன், இந்திய மருந்து நிறுவனங்களுடன் இணைந்து லெனகாபவிர் என்ற ஹெச்.ஐ.வி தடுப்பூசியை குறைந்த விலையில் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன. வருடத்திற்கு இருமுறை செலுத்தப்படும் இந்த ஊசி, சுமார் 3,500 ரூபாய் விலையில் கிடைக்கும்.

PREV
14
ஹெச்.ஐ.வி தடுப்பு மருந்து

யுனிடேடு மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள், லெனகாபவிர் என்ற ஹெச்.ஐ.வி தடுப்பு மருந்தை (HIV prevention drug) குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு குறைந்த விலையில் கொண்டு செல்ல இந்திய மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, 2027ஆம் ஆண்டு முதல் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஊசி மருந்து ஒரு வருடத்திற்கு வெறும் $40 (சுமார் ₹3,548) என்ற விலையில் கிடைக்கும்.

24
அமெரிக்காவில் அதிக விலை

அமெரிக்காவைச் சேர்ந்த Gilead Sciences என்ற நிறுவனம் இந்த மருந்தை 'Yeztugo' என்ற வணிகப் பெயரில் விற்பனை செய்கிறது. அமெரிக்காவில் இதன் ஆண்டு விலை சுமார் $28,000 ஆகும். இந்த விலையை ஒப்பிடுகையில், இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்தின் விலை மிகவும் குறைவாக உள்ளது.

34
இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி

யுனிடேடு அமைப்பு டாக்டர் ரெட்டி'ஸ் லேபரட்டரீஸ், கிளிண்டன் ஹெல்த் ஆக்சஸ் இண்டியா மற்றும் விட்ஸ் ஆர்.ஹெச்.ஐ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதேபோல, கேட்ஸ் ஃபவுண்டேஷன் ஹெட்டெரோ என்ற இந்திய மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மருந்தின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் பிராந்திய உற்பத்தியை நோக்கியும் செயல்பட்டு வருவதாகவும் யுனிடேடு அமைப்பின் அதிகாரி கார்மென் பெரஸ் காசாஸ் தெரிவித்தார்.

44
.ஐ.வி தடுப்பூசி

வருடத்திற்கு இருமுறை மட்டும் செலுத்த வேண்டிய இந்த ஊசி மருந்து, ஹெச்.ஐ.வி தொற்று பரவும் அபாயத்தை 99.9% க்கும் அதிகமாகக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் ஹெச்.ஐ.வி தொற்று பரவல் 40% குறைந்தாலும், 2024-ல் 1.3 மில்லியன் மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். "இந்த மருந்தின் மூலம் நாம் ஹெச்.ஐ.வி யை முடிவுக்குக் கொண்டு வர முடியும்" என பெரஸ் காசாஸ் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மலிவு விலை மருந்தின் வருகை, ஹெச்.ஐ.வி தடுப்பு முயற்சிகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories