அக்டோபர் 1 முதல்.. ஆன்லைன் பெட்டிங் கேம்களுக்கு தடை.. இந்தியாவே மாறப்போகுது

Published : Sep 19, 2025, 11:21 AM IST

இந்திய அரசு ஆன்லைன் பண விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

PREV
13
ஆன்லைன் கேமிங் தடை

இந்திய அரசு ஆன்லைன் பண விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. 2025 அக்டோபர் 1 முதல் சட்டம் அமலுக்கு வருகிறது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுடன் மூன்று ஆண்டுகளாக ஆலோசனை நடந்தது.

23
அக்டோபர் 1 விதிகள்

அக்டோபர் 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தினால், ஊக்குவித்தால் அல்லது பணப் பரிமாற்றம் செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். வங்கிகள், பேமென்ட் ஆப்கள் கூட மூன்று ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் எதிர்கொள்ள நேரிடும்.

33
புதிய கேமிங் சட்டம்

450 மில்லியன் மக்கள் ஆன்லைன் பேட்டிங்கால் ரூ.20,000 கோடி இழந்துள்ளனர். இதனால் கடன் சுமை, குடும்ப பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இதுபற்றி அரசு கூறியதாவது, “இனி யாரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கையை தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories