திரிபுரா, அசாமில் குலுங்கிய வீடுகள்.. அதிகாலையில் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!

Published : Jan 05, 2026, 09:00 AM IST

திரிபுரா மற்றும் அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 வரை பதிவான இந்த நில அதிர்வுகள், அருணாசலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

PREV
13

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுரிக்டர் அளவுகோலில் 3.9ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை வீட்டு வெளியேறினர்.

23

அதேபோல் அசாம் மாநிலத்தில் மோரிகானில் அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்கு கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட ஆழத்தில் 26.37 வடக்கு அட்சரேகையிலும், 91.50 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசலப் பிரதேசத்தின் சில மத்திய மேற்கு பகுதிகளில் மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேற்கு வங்கம் பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

33

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பொதுமக்கள் வீடு குலுங்கியதை அடுத்து அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்புக்களும், சேதம் மற்றும் பாதிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories