1 - 9, 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை - முதல்வர் அதிரடி உத்தரவு

First Published | Nov 18, 2024, 6:53 AM IST

தலைநகரில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக மக்கள் கடும் சிரமம் அடைந்து வந்த நிலையில் 10, 12ம் வகுப்பு தவிற மற்ற அனைத்து மாணவர்களுக்கும் இனி ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Schools Holiday

தொடர்ந்து அதிகரிக்கும் வாகன நெருக்கடி, தொழிற்சாலைகளின் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் தலைநகரில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் குவியல், குவியலாக தீயிட்டு கொளுத்தப்படுவதால் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைகிறது. ஏற்கனவே காற்றின் தரத்தை சீராக பராமரிக்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்க நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காற்று மாசு கட்டுப்படுவதாக இல்லை.

Air Pollution

காற்று மாசடைவதைத் தடுக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று மாலை (ஞாயிற்று கிழமை) 7 மணியளவில் நாட்டின் 4 நகரங்களில் காற்றின் தரம் 457 என்ற மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. காற்றின் தரக் குறியீடு ஆறு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 0 மற்றும் 50க்கு இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு 'நல்லது' என்பதைக் குறிக்கிறது, அதே சமயம் 51 முதல் 100 வரை 'திருப்திகரமானதாக' கருதப்படுகிறது. 101 மற்றும் 200 க்கு இடைப்பட்ட நிலைகள் 'மிதமான' என வகைப்படுத்தப்படுகின்றன, 201 முதல் 300 வரை 'மோசம் (Poor)' என வகைப்படுத்தப்படுகிறது. 301 முதல் 400 வரையிலான வரம்பு "மிகவும் மோசமானது" என்று கருதப்படுகிறது, அதே நேரத்தில் 401 முதல் 450 'கடுமையான' காற்று மாசுபாட்டைக் குறிக்கிறது. 450ஐத் தாண்டிய பதிவு 'மிகவும் கடுமையான' வகைக்குள் அடங்கும், அதாவது மிகவும் அபாயகரமான நிலைமைகள்.

Tap to resize

Air Pollution

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, நாட்டின் நான்கு நகரங்கள் "கடுமையான" பிரிவில் AQI பதிவாகியுள்ளன. ஹரியானாவில் உள்ள பகதூர்கர் 445 காற்றின் தரக் குறியீடு உடன் முதல் இடத்திலும், டெல்லி (441), ஹரியானாவில் பிவானி (415) மற்றும் ராஜஸ்தானின் பிகானேர் (404) ஆகிய இடங்களிலும் உள்ளன. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் இரண்டாவது மிகவும் மாசுபட்ட நகரமாக பட்டியலிடப்பட்டது. நகரின் 24 மணி நேர காற்றுத் தரக் குறியீடு தினசரி மாலை 4 மணிக்குப் பதிவு செய்யப்பட்டு, 'கடுமையான' பிரிவில் 441 ஆக இருந்தது. சனிக்கிழமையன்று, AQI 417 ஆக இருந்தது.

Schools Holiday

டெல்லி முதல்வர் அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திங்கள் கிழமை முதல் GRAP-4 விதிக்கப்பட்டதன் மூலம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்படும். மேலும் மறு உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும்" என்று X இல் பதிவிட்டுள்ளார் முதல்வர் அதிஷி.

Schools Holiday

மேலும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது எல்என்ஜி, சிஎன்ஜி, பிஎஸ்-6 டீசல் அல்லது மின்சாரம் போன்ற சுத்தமான எரிபொருளில் இயங்கும் டிரக்குகளைத் தவிர, டெல்லிக்குள் டிரக்குகள் நுழைவதை இந்த உத்தரவு தடை செய்கிறது. டெல்லிக்கு வெளியே இருந்து வரும் அத்தியாவசியமற்ற இலகுரக வணிக வாகனங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன, EVகள், CNG மற்றும் BS-VI டீசல் வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!