இதில், உள்ளே இருந்த புதுமண தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.