Published : Apr 16, 2025, 12:42 PM ISTUpdated : Apr 16, 2025, 12:56 PM IST
35 வகையான அங்கீகரிக்கப்படாத மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று CDSCO உத்தரவிட்டுள்ளது. இந்த மருந்துகளில் வலி நிவாரணிகள், நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் அடங்கும், அவை சரியான அறிவியல் பகுத்தறிவு இல்லாமல் பல மருந்து சேர்க்கைகளைக் கொண்டுள்ளன.
35 வகையான அங்கீகரிக்கப்படாத மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation) உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுதொடர்பான சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
24
FDC Medicines
அங்கீகரிக்கப்படாத மருந்துகள்
தடைசெய்யப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியலில் வலி நிவாரணிகள், நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், உயர் இரத்த அழுத்த மருந்துகள், நரம்பியல் வலி நிவாரணிகள், கருவுறுதல் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் ஆகியவை அடங்கும். இந்த மருந்துகளில் ஒரு மாத்திரையில் பல மருந்து சேர்க்கைகள் உள்ளன. அவை அறிவியல்பூர்வமாக சரியாக இல்லை.
மேலும், அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இத்தகைய FDC (Fixed Dose Combination) வகை மருந்துகளுக்கான ஒப்புதல் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டு மருந்துகளை அங்கீகரிக்கும்போது அவை கண்டிப்பாக சரியான விகிகத்தில் இருப்பதை உறுதிசெய்யுமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
34
CDSCO on Unapproved Drugs
FDC மருந்துகள்:
FDCs என்பது ஒரு மாத்திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை இணைக்கும் மருந்து ஆகும். அவை "காக்டெய்ல் மருந்துகள்" என்றும் குறிப்பிடப்படுகின்றன.
CDSCO வின் தலைவரான இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைவர் (DCGI) ராஜீவ் சிங் ரகுவன்ஷி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அங்கீகரிக்கப்படாத FDC-களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
CDSCO இன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பாய்வு இல்லாமல் மாநில அதிகாரிகளிடம் உரிமம் பெற்று, பின்னர் உரிமம் ரத்து செய்யப்பட்ட மருந்துகள், நோட்டீஸ் அனுப்பிய பிறகு திரும்பப்பெறப்பட்ட மருந்துகள் உள்பட 35 அங்கீகரிக்கப்படாத FDC-களின் பட்டியலும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
44
DCGI letter on FDCs
அறிவியல் ரீதியான சரிபார்ப்பு:
அறிவியல் ரீதியான சரிபார்ப்பு இல்லாதது நோயாளியின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவை தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளுக்கும் வழிவகுக்கும்.
மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு DCGI ராஜீவ் சிங் ரகுவன்ஷி கேட்டுக் கொண்டுள்ளார். "இது பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது" என்று எச்சரித்துள்ளார். இந்த விஷயத்தை அவசரமாகக் கருதி தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.