தனியார் மருத்துவமனையில் அதிர்ச்சி! வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விமான பணிப்பெண் வெண்டிலேட்டரில் இருந்தபோது பாலியல் தொல்லை.
குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விமான பணிப்பெண் வெண்டிலேட்டரில் இருந்தபோது பாலியல் தொல்லை.
குருகிராமில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 46 வயதான விமான பணிப்பெண் வெண்டிலேட்டரில் இருக்கும்போது பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான பணிப்பெண் தனியார் மருத்துவமனை
டெல்லி குருகிராமில் கடந்த 5ம் தேதி 46 வயதான பெண் தங்கியிருந்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திய போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஏப்ரல் 7ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை கணவரிடம் கூறியபடி கதறி அழுதுள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விமானப் பணிப்பெண் சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வெண்டிலேட்டரில் இருக்கும் போது பாலியல் சீண்டல்
அதில், சிகிச்சையின் போது தான் வென்டிலேட்டரில் இருந்தேன். அப்போது மருத்துவமனையின் சில ஊழியர்கள் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், வென்டிலேட்டரில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை. மேலும் இரண்டு செவிலியர்களும் என்னைச் சுற்றி இருந்தனர் என்று தெரிவித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
மேலும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளி விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.